Wednesday, September 2

Tag: kayalchandran

இம்மாதம் 27ஆம் தேதி வெளியாகும்  ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’!

இம்மாதம் 27ஆம் தேதி வெளியாகும் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’!

News
அறிமுக இயக்குனர் சுதர் இயக்கத்தில் '2 Movie Buff ' நிறுவனம் சார்பில் ரகுநாதன் PS தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’. இப்படத்தில், கயல்' சந்திரமௌலி, சாட்னா டைட்டஸ், ராதாகிருஷ்ணன் பார்த்திபன், சாம்ஸ், டேணியல் ஆணி போப், அர்ஜெய் ஆகியோர் நடித்துள்ளனர். SDC பிக்சர்ஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் இப்படத்தை வெளியிடுகிறது. இதன் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய கயல் சந்திரமெளலி, ‘கயல் படத்திற்கு பிறகு நான் அதிகமாக எதிர்பார்க்கும் படம் எதுவென்று கேட்டால் அது ‘ திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ தான். அது எனக்கு எப்படி ஒரு அறிமுக படமாக கிடைத்ததோ, அதேபோல் என் அண்ணனுக்கு தயாரிப்பில் இது முதல் படம். எதை மூடி காண்பிக்கணுமோ அதை மூடி தான் காட்டணும், எதை மறைக்க வேண்டுமோ அதை மறைத்து தான் ஆக வேண்டும், எதை காண்பிக்க வேண்டுமோ அதை மட்டு...
“சந்திரமௌலி” என்ற சொந்தப் பெயருக்கு மாறிய ‘கயல்’ சந்திரன்…

“சந்திரமௌலி” என்ற சொந்தப் பெயருக்கு மாறிய ‘கயல்’ சந்திரன்…

News
அன்புடையீர்   எனது அறிமுக படமான ‘கயல்’ முதல் பேராதரவு நல்கி வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் வணக்கம்.   எனதுள்ளம் நன்றிப்பெருக்கில் நிறைந்திருக்கும் இவ்வேளையில், உங்கள் நல் ஆதரவோடு மேலும் ஊக்கமுடன் உழைத்து நல்ல படங்களில் நடித்து உங்களை மகிழ்விக்க மனம் விழைகிறது.   இதுநாள் வரை சந்திரன் என புனை பெயரில் அறியப்பட்ட நான் இனி என் உண்மை பெயரான “சந்திரமௌலி” என அறியப்பட வேண்டும் என விரும்புகிறேன்.   எனவே, பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவரும் “சந்திரன்” என்ற என் பெயரை இனி “சந்திரமௌலி” என்று அழைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.   எனது இயக்குநர்கள் , தயாரிப்பாளர்கள், நண்பர்கள் , பத்திரிகை/ஊடக நண்பர்கள் மற்றும் எனது பேரன்புமிக்க ரசிகர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்  .   அன்புடன்   சந்திரமௌலி    ...