Monday, November 16

கீழ் வெண்மணி நினைவு நாள்

Loading

கீழ் வெண்மணி கோரம் குறித்து பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கவிஞர் எழுதியது மனதில் பதிந்து விட்டது. இதோ அந்தக் கவிதை…

கறுப்புக் கரங்களால்
கட்டிய வீடுகள்
நெருப்புக் கரங்களால்
நீராக்கப்பட்டன
பஞ்ச பூதங்களில் இதுவரை
நில மகள் மட்டுமே
சுரண்டும் வர்கத்துக்கு
சோரம் போயிருந்தாள்
ஆனால் அந்த இரவிலோ
அக்கினி தேவன்கூட
தஞ்சை நிலப்பிரப்புக்களின்
கைக்கூலி ஆனானே…