KONG; SKULL ISLAND ஆங்கிலம் மற்றும் தமிழிலும்.

0

Loading

KONG: SKULL ISLAND

மனித இனம், ஆய்வு, ஆராய்ச்சி என்கிற ஒரு கோணத்தில், இயற்கை அன்னையின் மடியில் துள்ளி குதித்து விளையாடுகிற இதர உயிரினங்களை சீண்டி பார்த்து விளையாடுவது என்பது வாடிக்கையான ஒரு நிகழ்வாகிவிட்டது என்பது தெரிந்ததே! ‘Godzilla’, ‘Jurassic Park’ போன்ற படங்களின் மூலம், இவ்வாறு செயல்படும்பொழுது ஏற்படும் பின் விளைவுகளை பற்றி கண்டு அறிந்துள்ளோம்! நிஜ வாழ்விலும் கூட அம்மாதிரியான நிகழ்வுகள் சகஜமே!

 

அம்மாதிரியான ஒரு கதை களத்தில், வெகு தொலைவில் இருக்கும் ஒரு தீவில் இயற்கை அன்னையின் அருளால், வித்தியாசமான தோற்றம் கொண்ட உயிரினம் ஒன்றை, அங்கு வந்து சேரும் சிலர் சீண்டி பார்பபதால், சீற்றம் கொண்ட இவ்வினம், சீறி எழுந்து, எதிர்ப்பு தெரிவித்து போராட முற்படுவதே இப்படத்தின் சாரம்.

 

Merian C. Cooper, Edgar Wallace இணைந்து உருவாக்கிய ‘King Kong’ என்கிற கதை கருவை மையமாக வைத்து John Gatins மற்றும் Dan Gilroy ஆகிய இருவரது மூலக்கதை அமைப்பின் அடிப்படையில், Dan Gilroy, Max Borenstein னோடு இணைந்து திரைக்கதையை அமைத்துள்ளார்.

கதை நிகழும் காலகட்டம், 1973 ஆம் ஆண்டு. Pacific பரப்பில் அழகிய அதே சமயம் ஆபத்தும் நிறைந்த ஒரு தீவில் ராட்சஸ மனித குரங்கின் வடிவமைப்பில், மிக பெரிய தோற்றத்துடன் பலம் பொருந்திய பராக்கிரமமும் கொண்ட ஒரு உயிரினம் வாழ்ந்து வருகிறது.

Monarch என்கிற ஒரு ரகசிய அமைப்பை சேர்ந்த ஒரு குழு, அந்த தீவிற்கு சென்று ஆராய்ச்சி செய்ய முடிவு செய்கிறது! மனித குலத்தின் வாடையே இன்றி, இயற்கையான ஒரு சூழலில், அமைதியாக வாழ்ந்து வரும் இவ்வினம், இவர்களது வருகையால், திசை திரும்பி நிற்க நேரிடுகிறது! மாற்றம் செய்ய முற்படும் அவர்கள் மீது சீற்றம் கொள்கிறது, அவ்வினம்! வேட்டை ஆட வந்தவர்கள், வேட்டை ஆட படவேண்டிய ஒரு நிலை ஏற்படுகிறது! உயிரை கையில் பிடித்துக்கொண்டு, அவர்கள் அனைவரும் ஓடி ஒளிய வேண்டிய ஒரு நிர்பந்தம் எழுகிறது!

 

இந்த ‘விளையாட்டின்’ போது, ‘Kong’, ‘King’ ஆன கதை பற்றியும் நாம் அறிய வருகிறோம்!

 

Tom Hiddleson, Samuel L. Jackson, John Goodman, Brie Larson, Jing Tian மற்றும் John C. Reilly ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். Henry Jackman இசை அமைக்க, Larry Fong ஒளிப்பதிவு செய்துள்ளார். Richard Pearson படத்தை தொகுத்துள்ளார்

Share.

Comments are closed.