சர்வதேச படவிழாக்களில் சாதனை படைத்து வரும் “கூழாங்கல்”!

0

 371 total views,  1 views today

ரௌடி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்த “கூழாங்கல் எனும் Pebbles” திரைப்படம், உலகத் திரைப்பட விழாக்களில், பெரும் வரவேற்பை பெற்று வருவதில், மிகவும் பெருமை கொள்கிறோம். உலகின் பிரதானமான திரைப்பட விழாக்களில் தேர்வானதோடு, பார்வையாளர்கள் மற்றும் முன்னணி திரை விமர்சகர்கள் அனைவரது பாராட்டுக்களையும் “கூழாங்கல்” திரைப்படம் குவித்து வருவது, மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.

மேலும் கூழாங்கல் திரைப்படம் இம்மாதம் அடுத்தடுத்து நடைபெறக்கூடிய ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா, மிட்நைட் சன் திரைப்பட விழா மற்றும் லண்டன் இந்திய திரைப்பட விழா, ஆகிய திரைவிழாக்களில் கலந்து கொள்வதை , பேராதரவும் தொடர் ஊக்கமும் அளித்து வரும் பத்திரிக்கைத்துறை நண்பர்களுக்கும், சினிமா ரசிகளாகிய உங்களுக்கும் பகிர்வதில் மிகவும் பெருமை கொள்கிறோம்.

ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா ஆசியா கண்டத்தில் நடைபெறும், மிகப்பெரும் உலக திரைப்பட விழாக்களில் முதன்மையானதாகும். ஜூன் 11-ம் தேதி தொடங்கிய இத்திரைப்பட விழா ஜூன் 22 வரை நடைபெறுகிறது. இத்திரைவிழாவின் 24-வது பதிப்பில் “கூழாங்கல் (எனும்) Pebbles” திரைப்படம் உலகின் பிரதான திரைப்பட விழாக்களில் பங்குக்கொண்டு விருதுகளையும் பாராட்டுக்களையும் குவிக்கும், திரைப்படங்களை திரையிடும் ‘Viva La Festival’ பிரிவில் திரையிடப்படுகிறது.

மிட்நைட் சன் திரைப்பட விழா, 2021 ஜூன் 16 முதல் ஐந்து நாட்கள் பின்லாந்து நாட்டில் உள்ள Sodankyla நகரில் நடைபெறும் உயரிய திரைவிழாவாகும். இவ்விழாவில் உலகின் பல பகுதிகளிலிருந்தும் பல தரமான படைப்புகளை பின்லாந்து நாட்டின் சினிமா ரசிகர்கள் கண்டுகளிக்கும் வகையில் தொடர்ந்து 24 மணி நேர திரையிடலும், பெரிய திறந்தவெளி திரையரங்கமும் கொண்ட இத்திரைப்பட விழா மிகவும் பிரசித்திபெற்றது. இவ்விழாவின் 36-வது பதிப்பில் “கூழாங்கல் (எனும்) Pebbles” திரைப்படம் “Gems of New Cinema” பிரிவில் திரையிடப்படுகிறது.

2021 ஜூன் 17 முதல் 27 வரை நடைபெறும் 12-வது லண்டன் இந்திய திரைப்பட விழா, இந்திய துணைக்கண்டத்திலிருந்து வெளியாகும் உயரிய படைப்புகளை திரையிடும் சிறப்பு திரைவிழாவாகும். இந்திய துணைகண்டத்தின் உயர் கலாச்சாரத்தை, சித்தாங்களை வெளிப்படுத்தும் நோக்கத்தில் நடைபெறும் இத்திரைவிழாவில் “கூழாங்கல் (எனும்) Pebbles” திரைப்படம் “ Young Rebel ” பிரிவில் திரையிடப்படுகிறது.

இத்திரைப்பட விழாக்களில் தேர்வானது குறித்து இயக்குநர் பி.எஸ். வினோத்ராஜ் கூறியதாவது:
கூழாங்கல் திரைப்படம் மொழி மற்றும் எல்லைகளை கடந்து திரைப்பட விழாக்களின் மூலமாக மக்களிடம் சென்றடைந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இது நடைபெற காரணமான உங்கள் அனைவருக்கும் நன்றிகள்.

இத்திரைப்பட விழாக்களில் தேர்வானது குறித்து தயாரிப்பாளர்கள் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா கூறியதாவது:
“கூழாங்கல்” எங்கள் நிறுவனத்தின் மிகப்பிரத்கேயமான படைப்பாகும். இப்படம் உலகம் முழுக்க பெரும் பாரட்டுக்களை குவித்து வருவது, எங்களுக்கு பெருமை. உலகின் பலமுனைகளிலிருந்தும் திரை ஆரவலர்கள், விமர்சகர்கள், ரசிகர்கள் அனைவரும் எங்களை தொடர்பு கொண்டு, பாராட்டி வருகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் எங்களின் நன்றிகள். மேலும் எங்கள் திரைப்படம் அடுத்தடுத்து கலந்துகொள்ளவுள்ள திரைப்பட விழாக்கள் குறித்த அறிவிப்பை வெளியிடுவதில் மகிழ்கிறோம். உங்களின் ஆதரவில் எங்கள் திரைப்படத்தின் வெற்றிப்பயணம் தொடரும் நன்றி.

Share.

Comments are closed.