கலைப்புலி S தாணு வெளியிடும் பிரமாண்ட படைப்பு “குருக்ஷேத்ரம்”!

0

 292 total views,  1 views today

மாபெரும் இதிகாசங்களில் ஒன்று மஹாபாரதம். கௌரவர்கள் மற்றும் பாண்டவர்களின் உறவினர்களுக்கிடையேயான குருக்ஷேத்ரா போராட்டத்தை விவரிக்கும் பிரமாண்ட படம் ‘குருக்ஷேத்ரம்’.

 3D முறையில் உருவாகியுள்ள இந்த படத்தை விருஷபாத்ரி புரொடக்ஷன் தயாரிக்க, வி கிரியேஷன்ஸ் கலைப்புலி S தாணு வழங்க, பிரம்மாண்ட இந்தப் படம் தமிழ் , தெலுங்கு , ஹிந்தி , கன்னடம் , மலையாளம் என ஐந்து மொழிகளில்  தயாரிக்கப்பட்டுள்ளது.

நாகன்னா இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் பீஷ்மராக அம்பிரிஷ், துரியோதனன் ஆக தர்ஷன்,
கர்ணன் ஆக அர்ஜுன் சார்ஜா,
பீஷ்மர் ஆக அம்பரீஷ்,
கிருஷ்ணர் ஆக வி. ரவிச்சந்தர்,
அர்ஜுனன் ஆக சோனு சூட்,
சகுனி ஆக ரவி ஷங்கர்,
சையியா ஆக ராக்லைன் வெங்கடேஷ்,
திரௌபதி ஆக ஸ்நேகா என நட்சத்திர பட்டாளமே  நடித்துள்ளார்கள் .
இந்த மாபெரும் இதிகாசத் திரைப்படத்திற்கு ஹரி கிருஷ்ணா இசையமைத்துள்ளார்.

ஐெய் வின்சென்ட் ஒளிப்பதிவும், ஜோ. நி. ஹர்ஷா எடிட்டிங்கும் கையாண்டுள்ளனர்.
பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்தை முனி ரத்னா எழுதி தயாரித்துள்ளார்.

வருகிற ஆகஸ்ட் மாதம் இந்தப் படம் திரையிட திட்டமிட்டுள்ளனர்.

Share.

Comments are closed.

CLOSE
CLOSE