Friday, May 1

“காக்டெய்ல்” படக்குழு தயாரிப்பாளர் சங்கத்ததுக்கு எழுதிய கடிதம்!

Loading

அனுப்புநர்
P.G.முத்தையா
தயாரிப்பாளர்

பெறுநர்
உயர்திரு பொறுப்பாளர்
அவர்கள்
தமிழ்த் திரைப்படத்
தயாரிப்பாளர்
சங்கம்
சென்னை

மதிப்பிற்குரியோர்க்கு
வணக்கம்!
“மனித இனம் மகிழ்ந்திருக்க உருவாக்கப்பட்டதே கலை”
“அக்கலை, மனிதர்களின் நலம், வளம் சார்ந்தே வரவேற்கப்படுகிறது. மனிதன் தன் மகிழ்வானப் பொழுதுகளை அமைத்துக் கொள்ள ஆரோக்கியமான உடல் நலமுடன் இருப்பது முக்கியம்.
தற்போது உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது மிகப் பயங்கர தொற்று நோயான கொரோணா வைரஸ்.
பாதிக்கப்பட்ட அநேகரை நினைத்து கவலை கொள்கிறது
“காக்டெய்ல்” படக்குழு.
இன்னமும் இந்நோய் பரவும் அபாயம் இருப்பதால் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.
நமது தமிழக அரசும் வரும் முன் காக்கும் நடவடிக்கைகளை மிகத் துரிதமாகச் செய்து வருகிறது. நன்றி!
மக்கள் அதிகம் கூடும் எல்லா இடங்களையும் அரசு பாதுகாப்பு நடவடிக்கையாக மூடச்சொல்லி உத்தரவிட்டுள்ளது. அதில் திரையரங்குகளும் அடங்கும்.
“காக்டெய்ல்” படக்குழு மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. எங்கள் “காக்டெய்ல்” படம் வருகிற 20ந்தேதி திரைக்கு வரவிருந்தது.
தற்போது திரையரங்குகள் மூடப்படுவதால் எங்கள் திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பட வெளியிட்டை நோக்கி விளம்பரம் திரையரங்குகளுக்கான முதலீடுகள் என நிறைய பணம் செலவு செய்துள்ளோம்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் படம் வெளியாக முடியாததால் அதிக இழப்பைச் சந்திக்க நேர்ந்துள்ளது. நாடே பேரிடர் நோக்கி நிற்பதால், இவ்விழப்பை நாங்கள் கணக்கில் கொள்வது முறையல்ல. எப்போது வெளியானாலும் எங்கள் “காக்டெய்ல்” படம் மக்கள் மனதில் இடம்பிடிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
ஆனால் அதற்கு ஈடாக நிலைமை சீராகி மீண்டும் திரையரங்குகளில் இயல்புநிலை திரும்பும்போது இந்த வாரம் வெளியாகாமல் நின்றுபோன படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வெளியிடச் செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
அவ்வமயம் பெரிய படங்களோ, கூடுதல் படங்களோ வெளியாகி விடாமல் ஒழுங்குபடுத்தித் தருவதோடு எங்கள் படங்களுக்கு தேவையான நல்ல திரையங்குகளை ஒதுக்கித் தர வேண்டும்.
அதுவே எங்களது இழப்பைச் சரிசெய்ய நீங்கள் செய்யும் பேருதவியாக இருக்கும்.
எம் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கமும், தமிழக அரசும் இதைக் கருத்தில் கொண்டு ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
“நிலை மாறும் உலகில்” இன்றைய இந்த அபாயகரமான நிலை விரைவில் மாற வேண்டிக் கொள்கிறேன் . சினிமா தொழிலாளர்கள், பொதுமக்கள் தங்கள் குழந்தைகளைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.
மக்கள் நலனில் அக்கறையுடன் மீண்டும் ஒரு தேதிக்காக காத்திருக்கிறோம்.
நன்றியுடன்!
P.G.முத்தையா