புரட்சி தலைவர் ‘பாரத் ரத்னா ” எம். ஜி. ஆர் அவர்களது 102-வது பிறந்த நாள் நாடெங்கும் ரசிகர்களால் இன்று கொண்டாப்பட்டது . இதை ஒட்டி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பாக , நடிகர் சங்க வளாகத்தில் அவரது புகைப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது. இந்நிகழ்ச்சியில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் M.நாசர், பொது செயலாளர் விஷால், செயற்குழு உறுப்பினர்கள் நந்தா மற்றும் நியமன செயற்குழு உறுப்பினர்கள் மனோபாலா ஆகியோர் கலந்து கொண்டு மலர் மாலை அணிவித்தனர்.