மகன் படம் எடுப்பதற்காக சொத்தை விற்ற பெற்றோர்!

0

 337 total views,  1 views today


‘மாயபிம்பம்’ படத்தில் அனைவருமே புதுமுகம் என்பதால் அப்படத்தைத் தயாரிக்க எந்த நிறுவனமும் முன்வரவில்லை. அதனால் சோர்வடைந்த தங்கள் மகனைப் பார்த்த டைரக்டர் சுரேந்தரின் பெற்றோர், தங்களது ஓய்வூதிய தொகை, அம்மாவின் நகைகள் மற்றும் அவர்களின் வாழ்நாள் சேமிப்புவரை அனைத்தையும் இப்படம் எடுக்கக் விற்றுக் கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கு கதை தெரியாது, எப்படியும் தன் மகன் தவறாகப் போகமாட்டான் என்ற நம்பிக்கையில் உதவியிருக்கிறார்கள். படம் முழுவதும் எடுத்து முடித்த பிறகு திரையில் பார்த்த அவரது பெற்றோர்களும், குடும்பத்தாரும் மற்றும் நண்பர்களும் மகிழ்ந்து பாராட்டியிருக்கிறார்கள். பெரிய டைரக்டர்களான பாலாஜிசக்திவேல், சுசீந்திரன், பாண்டிராஜ் , வெற்றிமாறன் போன்றவர்கள் பார்த்து பிரமித்துள்ளார்கள். காதலின் வலியை யதார்த்தமாக சொல்லியிருக்கிறீர்கள் என்று பாராட்டியுள்ளார்கள். படத்தை பார்த்த டைரக்டர் சுசீந்திரனின் தம்பி தாய்சரவணண் இப்படத்தை வெளியிட உதவி செய்துள்ளார்.

ஜூலை மாதம் 2-ம் வாரத்தில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.

Share.

Comments are closed.