இணையத்தை கலக்கும் ‘ஹரா’ பாடல்!

0

 33 total views,  1 views today

 

 

 

 

மலேசியா மண்ணின் ‘படைத்தலைவனாக’ மாறிய மோகன், இணையத்தை கலக்கும் ‘ஹரா’ பாடல்!

Song Link:

கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் தயாரிப்பில், ‘தாதா 87’ மற்றும் ‘பவுடர்’ படங்களை இயக்கியுள்ள விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகும், ‘வெள்ளி விழா நாயகன்’ மோகன் முதன்மை வேடத்தில் நடிக்கும் திரைப்படம் ‘ஹரா’.

மலேசியாவில் நடைபெற்ற‌ கலைநிகழ்ச்சியில் வெளியான ‘ஹரா’ படத்தின் ‘படைத்தலைவன்’ பாடலை
இரண்டே நாட்களில் 13 லட்சத்துக்கும் மேல் பார்வையாளர்கள் கண்டு ரசித்து உள்ளனர். ‘படைத்தலைவன்’ பாடலுக்கு உலகம் முழுவதும் மகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதால் படக்குழுவினர் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

‘ஹரா’ திரைப்படத்தை விரைவில் திரைக்கு கொண்டு வருவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன என்று இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி தெரிவித்தார்.

எத்தனையோ இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் முயற்சித்தும் பல வருடங்களாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த மோகன், இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜியின் கதையை பெரிதும் விரும்பி ‘ஹரா’ திரைப்படத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை மோகனை பல்வேறு கதாபாத்திரங்களில் பார்த்து ரசித்து மக்கள் கொண்டாடியது போல, ‘ஹரா’ படத்திலும் அவரது கதாபாத்திரம் மிகவும் பேசப்படும் என இயக்குநர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

‘ஹரா’ திரைப்படத்தில் குஷ்பு, யோகி பாபு, கௌஷிக், அனித்ரா நாயர்,மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, விஜய் டிவி தீபா, மைம் கோபி, சாம்ஸ், மற்றும் சந்தோஷ் பிரபாகர் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடிக்க, மிகுந்த பொருட்செலவில் இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே முதலுதவி, குட் டச், பேட் டச் உள்ளிட்டவற்றை குழந்தைகளுக்கு சொல்லித் தருவது போல, ஐபிசி சட்டங்களையும் அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதே ‘ஹரா’ படத்தின் முக்கிய கருத்தாகும்.

இப்படத்தில் முதல் பார்வை, டைட்டில் டீசர் மற்றும் ‘கயா முயா…’ என்ற பாடல் உள்ளிட்டவை சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் வரவேற்பு பெற்றுள்ள சூழலில் படைத்தலைவன் பட்டையை கிளப்பு கிறான்.

விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில், கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெயஸ்ரீ விஜய் தயாரிப்பில் உருவாகும் ‘வெள்ளி விழா நாயகன்’ மோகன் நடிக்கும் ‘ஹரா’ விரைவில் திரைக்கு வருகிறது.

***

Share.

Comments are closed.