இணையத்தை கலக்கும் ‘ஹரா’ பாடல்!
மலேசியா மண்ணின் 'படைத்தலைவனாக' மாறிய மோகன், இணையத்தை கலக்கும் 'ஹரா' பாடல்!
Song Link:
https://youtu.be/at95zYpuqRY
கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் தயாரிப்பில், ‘தாதா 87’ மற்றும் 'பவுடர்' படங்களை இயக்கியுள்ள விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகும், ‘வெள்ளி விழா நாயகன்’ மோகன் முதன்மை வேடத்தில் நடிக்கும் திரைப்படம் 'ஹரா'.
மலேசியாவில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் வெளியான 'ஹரா' படத்தின் 'படைத்தலைவன்' பாடலை
இரண்டே நாட்களில் 13 லட்சத்துக்கும் மேல் பார்வையாளர்கள் கண்டு ரசித்து உள்ளனர். 'படைத்தலைவன்' பாடலுக்கு உலகம் முழுவதும் மகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதால் படக்குழுவினர் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
'ஹரா' திரைப்படத்தை விரைவில் திரைக்கு கொண்டு வருவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன என்று இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி தெரிவித்தார்.
எத்தனையோ ...
