83 திரைப்படத்துடன் இணையும் மொபில்!

0

 76 total views,  2 views today

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான ’83-உடன் மொபில் இணைந்துள்ளது

டிசம்பர் 06, 2021 | கோயம்புத்தூர் – இந்தியாவின் முன்னணி எஞ்சின் ஆயில் பிராண்டான மொபில், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான ’83’-உடன் கூட்டுச் சேர்ந்துள்ளது. இது இந்த கிறிஸ்துமஸ்-இல் வெள்ளித்திரையில் வெளிவரவுள்ளது. விளையாட்டைப் பற்றிய இந்த திரைப்படத்தின் மூலம், 1983 கிரிக்கெட் உலகக் கோப்பையின் வரலாற்று வெற்றியை இந்தியா மீண்டும் ஒருமுறை கண்முன்னே கண்டுகளிக்கும். இத்திரைப்படம் நாடு முழுவதும் தேசபக்தியைக் கிளர்ந்தெழச் செய்யும் என்பது உறுதி. ரன்வீர் சிங் நடித்துள்ள ‘83’ திரைப்படம், இதற்கான திட்டம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது. இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று தயாரிப்பாளர்கள் உறுதியளித்ததில் இருந்தே திரைப்பட ரசிகர்கள் இதற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

1983 உலகக் கோப்பைப் போட்டி முழுவதும், 14 உத்வேகம் பெற்ற வீரர்களின் பயணத்தையும், கபில்தேவின் தலைமையின் கீழ் பெற்ற இந்த வரலாற்று வெற்றியையும் இத்திரைப்படம் கண்முன்னே விரிக்கும்.

ரன்வீர் சிங் தனது பாத்திரமான கபில்தேவாகவே வாழ்ந்திருப்பதைக் காணலாம். இக்குழுவின் நடிகர்களாக தாஹிர் ராஜ் பாசின், ஜீவா, சாகிப் சலீம், ஜதின் சர்னா, சிராக் பாட்டீல், டிங்கர் ஷர்மா, நிஷாந்த் தஹியா, ஹார்டி சந்து, சாஹில் கட்டார், அம்மி விர்க், ஆதிநாத் கோத்தாரே, தைரியா கர்வா, ஆர் பத்ரீ மற்றும் பங்கஜ் திரிபாதி ஆகியோர் உள்ளனர். கபில்தேவின் மனைவி ரோமியாக தீபிகா படுகோனே முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

மொபில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ என்ஜின் ஆயில் பார்ட்னர் ஆகும். இந்த இணைவானது, பிராண்டின் ‘ஃபரக் லாகர் தேக்கியே’ எனும் பிரச்சாரத்தின் கீழ் எடுக்கப்படும் பல முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும், இது பார்வையாளர்களை மாற்றத்தை ஏற்படுத்தவும் மாற்றத்தைக் காணவும் ஊக்குவிக்கிறது.

இந்த இணைவு குறித்து கருத்து தெரிவித்த எக்ஸான்மொபில் லூப்ரிகண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்-இன் CEO தீபாங்கர் பானர்ஜி, ‘83’ திரைப்படத்துடன் இணைந்திருப்பதில் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். எங்களின் ‘ஃபரக் லாகர் தேக்கியே’ எனும் பிரச்சாரத்தின் மூலம் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கும் மொபில் வலுவான ஆதரவாளராக இருந்து வருகிறது. 1983-இல் இந்தியாவின் உலகக் கோப்பை வெற்றியானது, இந்திய கிரிக்கெட் மற்றும் விளையாட்டுக்கு மட்டுமின்றி, தேச நம்பிக்கைக்கும் உறுதிப்பாட்டுக்கும் ஒரு மட்டத்தில் மிகப்பெரும் வித்தியாசத்தை ஏற்படுத்தியது. இந்த டிசம்பரில், இந்தியாவின் இந்த வெற்றியை மறுபடியும் கதையாகச் சொல்லிக் கொண்டாடுவோம். இந்த கிரிக்கெட் ப்ளஸ் திரைப்படக் கலவையானது, இந்தியர்களின் நாடித்துடிப்பை அதிகரிக்கச் செய்வதுடன் இந்திய நுகர்வோர்கள், வர்த்தகக் கூட்டாளர்கள் மற்றும் பணியாளர்களுடன் சிறப்பாக இணைப்பதற்கு எங்களுக்கு உதவும்.” என்றார்.

ரிலையன்ஸ் எண்டர்டெயின்மென்ட் மற்றும் பாண்டம் பிலிம்ஸ் வழங்கும் 83 திரைப்படமானது, கபீர் கான் பிலிம்ஸ்-இன் ஒரு தயாரிப்பாகும். தீபிகா படுகோனே, கபீர் கான், விஷ்ணு வர்தன் இந்தூரி, சஜித் நதியத்வாலா, பாண்டம் பிலிம்ஸ், ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் 83 ஃபிலிம் லிமிடெட் ஆகியோரால் தயாரிக்கப்படும் இப்படத்தை கபீர் கான் இயக்கியுள்ளார். ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் PVR பிக்சர்ஸ், இந்த கிறிஸ்துமஸ்-ஐ ஒட்டி டிசம்பர் 24, 2021 அன்று ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இத்திரைப்படத்தை வெளியிடுகிறது.

“மொபிலின் ஆதரவிற்கு நான் நன்றி கூறுகிறேன். மேலும், அவர்கள் படத்திற்கான அதிகாரப்பூர்வ என்ஜின் ஆயில் பார்ட்னராக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ’83 இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு நேர்மறையான மாற்றத்தைக் கொண்டு வந்த ஒரு அடையாளச் சின்னமான இந்த வெற்றியைக் கொண்டாடுகிறது. இது மொபிலின் ‘ஃபரக் லாகர் தேகியே’ என்ற நெறிமுறையுடன் ஒத்துப்போவதுடன் இந்த கொண்டாட்டத்தில் அவர்களை இயல்பான பங்காளியாக ஆக்குகிறது,” என்று கபீர் கான்,’83-இன் இயக்குனர் கூறினார்.

‘83 திரைப்படம், டிசம்பர் 24, 2021 அன்று திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் எக்ஸான்மொபில் – ஒரு சிறு குறிப்பு
எக்ஸான்மொபில்-இன் கடைநிலை வணிகமானது மொபில் பிராண்டட் லூப்ரிகண்டுகள் மற்றும் அதன் சிறப்புப் பொருட்களின் விநியோகம், விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளது. இரசாயன வணிகமானது சந்தை மேம்பாட்டு ஆதரவு, பகுப்பாய்வு மற்றும் அறிக்கையிடல் சேவைகளை வழங்குகிறது. இது பெங்களூரு-வில் உள்ள அதன் தொழில்நுட்ப மையத்தில் இரசாயன தயாரிப்பு பயன்பாட்டு ஆதரவு சேவைகள் மற்றும் தயாரிப்பு சோதனை ஆதரவையும் நடத்துகிறது. இதன் மேனிலை வணிகமானது மற்ற எக்ஸான்மொபில் மேனிலை துணை நிறுவனங்களுக்கு ஆலோசனை மற்றும் LNG சந்தை மேம்பாட்டு ஆதரவு சேவைகளை வழங்குகிறது. இதன் உலகளாவிய வணிக மையம்/தொழில்நுட்ப மையமானது, உலகம் முழுவதும் உள்ள எக்ஸான்மொபில்-இன் செயல்பாடுகளுக்கு பல்வேறு ஆதரவு சேவைகளை வழங்குகிறது. எக்ஸான்மொபில் இந்தியாவில் கல்வி, சுகாதாரம் மற்றும் சமூகத்தை மேம்படுத்தும் திட்டங்களில் பங்களிக்கிறது. இந்தியாவில் எக்ஸான்மொபில் பற்றிய கூடுதல் செய்திகள் மற்றும் தகவலுக்கு, எங்களைப் பின்தொடரவும் –

எக்ஸான் மொபில் கார்ப்பரேஷன் பல துணை நிறுவனங்களைக் கொண்டுள்ளது. அவற்றில் பல பெயர்கள் எக்ஸான்மொபில்-ஐக் கொண்டிருக்கும், ஆனால் கட்டாயமில்லை. வசதிக்காகவும் எளிமைக்காகவும், “எக்ஸான்மொபில்” என்ற சொல் குறிப்பிட்ட துணை நிறுவனங்கள் அல்லது துணைக் குழுக்களுக்கான சுருக்கமான குறிப்பாகப் பயன்படுத்தப்படுகிறது.

Share.

Comments are closed.