Movie Buff -First Clap-குறும் படங்களுக்கான போட்டியில்-இறுதி வெற்றியாளர்கள்!

0

Loading

IMG_9600

Movie Buff இன் ஓர் அங்கமான First Clap, இந்தியாவிலேயே முதல்முறையாக, அறிமுக திரை படைப்பாளிகளை ஊக்குவிக்கும் விதத்தில், மூன்றே நிமிட ஓட்ட் நேரத்தில் ஒரு குறும் படத்தை எடுத்து போட்டிக்கு சமர்பிக்கும் ஒரு போட்டியை அறிவித்திருந்தது அறிந்ததே!

 

கடந்த ஆண்டு December ம்மதம் தொடங்கிய இந்த போட்டியில் மொத்தம் 250 குறும்படங்கள் பங்குக்கொண்டன. அவற்றில் இருந்து, 5 சிறந்த குறும்படங்கள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. March மாதமும் April மாதாமுமாக 150 திரையரங்குகளில் அவை திரையிடப்பட உள்ளன. Qube Cinema Network இல் இவை திரையிடபடும்.

 

முதல் மூன்று சிறந்த குறும்படங்களுக்கு பரிசாக பணம் வழங்கப்படும்; அது தவிர, அதன் இயக்குநர்கள் நடிகர் சூரியாவின் 2D Entertainment happy wheels நிறுவனத்திற்காக கதை சொல்ல அழைக்கப்படுவார்கள். அந்த தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிவதற்கான வாய்ப்பும் கிடைக்க வாய்ப்புண்டு!

 

தேர்வு செய்யப்பட்ட குறும்படங்கள் பின்வருமாறு- Pradeep Ranganathan இயக்கிய App(a)Lock, Mahesh Balasubramaniyam இயக்கிய இந்த நாள் இனிய நாள்,Sri Vijay Ganapathy இயக்கிய Aval Azhagu, Nattu Dev இயக்கிய Think & Ink மற்றும் Prabhu Jeyaram இயக்கிய Ennanga Sir Unga Sattam.

 

குறும்படங்களை மதிப்பீடு செய்த குழுவில், ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர், P.C.Sreeram, இயக்குநர்கள், Vetrimaran, Ezhil, Hari Viswanath Arun Kumar, ஒளிப்பதிவாளர், Mahesh Muthusami, படதொகுப்பு நிபுணர், Praveen, 2D நிறுவனத்தின் CEO, Rajasekar Karpoorasundarapandian, ஒலிபதிவாளர் Udayakumar,Chennai International Short Film Festival இயக்குநர் Srinivasa சந்தனம் மற்றும் Sathish Kumar, CEO, Commonman Media(திரைப்பட வர்த்தக ஆய்வாளர் மற்றும் விமர்சகர்)

 

இந்த வகையான ஒரு திரையிடல் மூலமாக, சினிமா விரும்பிகள் நேரிடையாக தங்களது கருத்துகளை சம்பந்தப்பட்ட இயக்குநர்களுக்கு சொல்ல முடியும்!

 

மூன்றே நிமிடங்களில் ஓர் எளிய அழகிய கதையை சொல்லுவதேன்பது ஒரு சவால் தானே!

இளம் இயக்குநர்கள் பலரிடம் ஒளிந்து கொண்டுள்ள திறமைகளை வேளி கொணர ஓர் அரிய சந்தர்ப்பம் இது என்கிறார், நடிகர் சூரியா.

திறமை கொண்ட இளம் சிருஷ்டி கர்த்தாக்கள் மேம்பாடு அடைய 2D நிறுவனம் செரந்த முறையில் சந்தர்ப்பம் அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

திறமைமிக்க இளம் இயக்குநர்களை ஊக்குவிக்கவும் அவர்களுக்கு தக்க வாய்ப்புகள் வாங்கி தரவும் முயற்சி செய்வதே எங்களது நிறுவனம், என்கிறார், Arvind Ranganathan, CEO, Qube Cinema Technologies Pvt. Ltd.

 

இயக்குநர் Jayendra மற்றும் 5 குறும்பட இயக்குநர்களும், படங்கள் திரையிடப்பட்ட பின்னர், Media நண்பர்களோடு கலந்துரையாடலில் பங்கு கொண்டார்கள்.

குறிப்பிட்ட திரையரங்குகளில், இந்த குறும்படங்கள், இடைவேளை நேரத்தில் காண்பிக்கப்படும்.

வெற்றிபெற்ற பட இயக்குநர்கள், 2D நிறுவனத்தில் கதை சொல்லவும் படம் உருவாக்குவதில் பங்கு பெறவும் அழைக்கப்படுவார்கள்.

 

 

Share.

Comments are closed.