Thursday, June 19

முருகன் மந்திரம் வசனக்கவிதை காதல் கட்டுரைத் தொகுப்பு!

Loading

 

முருகன் மந்திரம் வசனக்கவிதை காதல் கட்டுரைத் தொகுப்பு…
திகட்ட திகட்ட காதல் செய்” இன்று மட்டும் நீங்கள் இலவசமாக டவுன்லோட் செய்து வாசிக்கலாம்.

Follow this link pls:
https://www.amazon.in/dp/B08F5HLFJN/

…..

புத்தகத்தில் இருந்து….
—————————————–

உனக்கு அவளைப் பிடிக்கும் என்பதற்காக, அவளுக்கும் உன்னைப் பிடிக்க வேண்டும் என்பது கட்டாயமா என்ன?

தனக்கு பிடித்த ஒன்றிற்கு தன்னையும் பிடிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது… சற்றே யோசித்தால் மடத்தனம் அல்லவா?

மேகம், முகம் கழுவிக்கொள்கையில் தூரத்து வானின், திசைகளின் சுவர்களில் தூரிகை வண்ணமாய் ஜாலம் காட்டும் வானவில்லை பிடிக்காதவர்கள் உண்டா? ரசிக்காதவர்கள் உண்டா?

தண்ணீப் புகையாய், தூவான தூசுகளாய்… முகத்தோடு மோதும் அருவியின் துளித்துளி சாரல்கள் பிடிக்காதவர்கள் உண்டா? அதில் நனைய ஆசைப்படாதவர்கள் உண்டா?

வெள்ளிக்கொலுசுகளின் வரிசை போல சிரித்து, கரை தொட்டுச் சிதறும் அலைகளின் தாய்மடி, அழகிய சமுத்திரம் பிடிக்காதவர்கள் உண்டா? கடல் அலையை பாதம் நனைக்க அனுமதிக்காதவர்கள் உண்டா?

பொக்கை வாய் திறந்து லிபி இல்லாத ஒரு புதுமொழியில் மழலைகள் பேசும் அழகில் லயிக்காதவர்கள் உண்டா? அதை அள்ளி எடுத்து கொஞ்ச விரும்பாதவர்கள் உண்டா?

மேகம் உனக்குப் பிடிக்கிறது.
வானம் உனக்குப் பிடிக்கிறது.
வானவில் உனக்குப் பிடிக்கிறது.
மழை உனக்குப் பிடிக்கிறது.
மழலை உனக்குப் பிடிக்கிறது.
மகா சமுத்திரமும் உனக்குப் பிடிக்கிறது.

ஆனால்… ஆனால்… என்றாவது… மேகத்திற்கு உன்னைப் பிடிக்க வேண்டும் என்று நீ அடம் பிடித்தாயா?

வானவில் உன்னை ரசிக்கவேண்டும் என்று நீ வம்பு செய்தாயா?

சமுத்திரம் உன் சொல் கேட்க வேண்டும் என்று நீ சாதித்தாயா?

மழலை உன்னைக் கொஞ்சவில்லை என்று நீ கோபித்தாயா?

உனக்குப் பிடிப்பது என்பது வேறு.
உன்னைப் பிடிப்பது என்பது வேறு.

– “திகட்ட திகட்ட காதல் செய்” புத்தகத்தில் இருந்து. புத்தகம் இப்போது அமேசான் தளத்தில் கிடைக்கிறது. கிண்டில் செயலி வழியாகவும் வாங்கி வாசிக்கலாம்.

இந்த இணைப்புகளில் வாங்கலாம்.

https://www.amazon.com/author/muruganmanthiram

வாங்கி வாசித்து மகிழ்ந்து உங்கள் கருத்துகளைக் கூறுங்கள்.

பேரன்புடன்,
முருகன் மந்திரம்
#muruganmanthiram #muruganmanthirambooks
#ThikattaThikattaKadhalSei