‘சூரியபுத்ரா மகாவீர் கர்ணன்’ இசை இயக்குனர் கே.பி.

0

 155 total views,  1 views today

இசை இயக்குனர் கே.பி. அவர்களின் இசையமைப்பில் வெளியான ஆல்பம் தற்போது மொழியியல் தடைகளை தாண்டி அணைத்து தரப்பு மக்களையும் கவர்ந்துள்ளது. கலைபுலி எஸ்.தானு வி கிரியேஷன்ஸ், ரைஸ் ஈஸ்ட் கிரியேஷன்ஸ் மற்றும் பல புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனங்கள் உடன் இணைந்த உருவாக்கப்பட்ட இந்த ஆல்பம் அவருக்கு பெரும் புகழைப் பெற்று தந்துள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக, அவரது பி.ஜி.எம், அவரின் மற்ற பன்முகப்படுத்தப்பட்ட ஆல்பங்கள் மற்றும் அவரது தனித்துவமான இசை பாணி அவரை இசை பிரியர்களின் விருப்பமான நட்சத்திரமாக மாற்றுகிறது. இத்தகைய பாராட்டத்தக்க படைப்புகளின் தொடர்ச்சியாக இப்போது அவருக்கு ஒரு மகத்தான வாய்ப்பை ஏற்படுத்தியது தான் ‘சூரியபுத்ரா மகாவீர் கர்ணன்’ திரைப்படம். பல மொழிகளில் பெரிய பட்ஜெட்டாக தயாரிக்கப்பட்டு பான்-இந்தியன் திரைப்படம் புகழ்பெற்ற தயாரிப்பாளர்களில் ஒருவரான ஜாக்கி பூஜா என்டர்டெயின்மென்ட்டின் ஜாக்கி பகானி என்பவரால் தயாரிக்கப்படஉள்ளது மற்றும் பிரபல இயக்குனர் ஆர்.எஸ்.விமல் இயக்கியுள்ளார். (இவர் பிருத்விராஜ் மற்றும் பார்வதி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த ‘என்னு நிண்டே மொய்தீன் என்ற மலையாள திரைப்படத்தை இயக்கியுள்ளார்) மேலும் கே.பி மலையாளத்தில் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார், அதேபோன்று தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட படங்களுக்கும் இசையமைக்கிறார், இவை அனைத்தும் பெரிய தயாரிப்பு நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டு
இயக்கப்படுகின்றன.

Share.

Comments are closed.