111 total views, 1 views today
நடிகர் நட்டி நடிக்கும் சைக்கோ திரில்லர் படத்தை புதுமுக இயக்குனர் ஹாரூன் இயக்குகிறார். ‘ட்ரீம் ஹவுஸ்’ சார்பில் வி.எம். முனிவேலன் தயாரிக்கும் ‘ட்ரீம் ஹவுஸ் ப்ரொடக்ஷன் நம்பர் .1’ படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.
படத்தில் நான்கு நாயகிகள் நடிக்கிறார்கள். நாயகிகள் தேர்வு நடைபெற்று வருகிறது. படத்தின் முக்கிய வேடங்களில் ‘பிளாக் ஷீப்’ நந்தினி, சாஷ்வி பாலா மற்றும் ப்ரீத்தி ஆகியோர் நடிக்கிறார்கள்.
இந்தப் படத்திற்கு கார்த்திக் ராஜா இசை அமைக்கிறார். கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு படத்தொகுப்பை சுதர்சன் மேற்கொள்கிறார். கலை இயக்குனர் பொறுப்பை அருண் ஏற்க, இந்த படத்தின் நடன இயக்குனராக சாண்டி மாஸ்டர் பணியாற்றுகிறார்.
ஆடை வடிவமைப்பு : டோரத்தி ஜெய்
மக்கள் தொடர்பு & நிர்வாக தயாரிப்பு: கே.எஸ்.கே செல்வா
தயாரிப்பு மேற்பார்வை: எம் எஸ் லோகநாதன்