“நவரசா” முதல் பாடல் வெளியானது!

0

 207 total views,  1 views today

சினிமா ஆளுமைகள் மணி ரத்னம் மற்றும் ஜெயேந்திர பஞ்சாபகேசன் தயாரிப்பில் உருவாகியிருக்கும், இந்த வருடத்தில் ரசிகர்களிடம் பேரார்வத்தை ஏற்படுத்தியிருக்கும், Netflix நிறுவனத்தின் “நவரசா” ஆந்தாலஜி படத்திலிருந்து, அழகான முதல் பாடலை வெளியிட்டிருக்கிறது Think Music நிறுவனம். இப்பாடல் 2021 ஜூலை 12 திங்கள் மாலை 5 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. “தூரிகா” எனும் மென் மெலடி காதல் பாடலான, இப்பாடலுக்கு இசையமைப்பாளர் கார்த்திக் இசையமைத்துள்ளார். பிரபல கவிஞர் மதன் கார்கி பாடல் வரிகளை எழுதியுள்ளார். நடிகர் சூர்யா, ப்ரயகா ரோஸ் மார்டின் நடிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், காதல் ரசத்தில் உருவாகியிருக்கும் “கிடார் கம்பியின் மேலே நின்று” படத்தில் இப்பாடல் இடம்பெற்றுள்ளது

Share.

Comments are closed.