ரசிகர்கள் பாராட்டு மழையில் “நவரசா” படைப்பாளிகள்!
ரசிகர்கள் கொண்டாடும் Netflix உடைய "நவரசா" ஆந்தாலஜி, பாராட்டு மழையில் படைப்பாளிகள் !
சமீபத்தில் Netflix தளத்தில் வெளியாகியுள்ள "நவரசா" ஆந்தாலஜி தொடரை, ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுக்க இந்த தொடர் பெரும் வரவேற்பை குவித்து வருகிறது. திரைத்தொழிலாளர்களின் நலனுக்காக, தமிழ் சினிமாவின் முன்னனி நட்சத்திரங்கள் ஒன்றிணைந்த தருணத்தை, இந்திய சினிமாவின் பொன் தருணமாக, ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்தியா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உட்பட 10 நாடுகளில் இந்த தொடர் Netflix தளத்தில் முதல் 10 இடத்தில் உள்ளது.
இந்திய திரைத்துறையின் பெருமை மிகு படைப்பாளியாக கொண்டாடப்படும் இயக்குநர் மணிரத்னம் பற்றும் முக்கிய படைப்பாளி ஜெயேந்திரா பஞ்சாபகேசன் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளனர்.
மனித உணர்வுளான கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை,...



