ஒரே நாளில் டீசர் மற்றும் டிரைலரை வெளியிட்ட ஒரு நொடி படக்குழு!

0

 17 total views,  1 views today

ஒரே நாளில் டீசர் மற்றும் டிரைலரை வெளியிட்ட ஒரு நொடி படக்குழுவினர்!

அறிமுக இயக்குநர் மணிவர்மன் இயக்கத்தில் தமன்குமார் நாயகனாக நடிக்கும் ‘ஒரு நொடி’ படத்தின் டீசரை தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ஆர்யா இன்று வெளியிட்டுள்ளார்.
இந்த படத்தின் டீசர் சரிகமா மியூசிக் நிறுவனத்தால் இன்று YouTube வலைத்தளத்தில் வெளியிடப்பட்டது. அதே நேரத்தில் தமிழ் திரையுலகில் முதல் முறையாக இப்படத்தின் ட்ரைலரும் தமிழ்நாடு முழுக்க 150 வெவ்வேறு திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இவ்வாறு செய்வதன் மூலம் ஆன்லைன் ரசிகர்கள் மற்றும் திரையரங்கு ரசிகர்களை இரண்டு விதங்களில் ஒருசேர கவர முடியும் என்பதே நோக்கம் ஆகும்.

பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், பாஃப்டா திரைப்படக் கல்லூரி நிறுவனரும், ‘காற்றின் மொழி’, ‘இவன் தந்திரன்’, ‘கோடியில் ஒருவன்’, ‘கொலைகாரன்’ போன்ற முக்கியமான படங்களை வெளியிட்ட விநியோகஸ்தருமான தனஞ்செயன் இப்படத்தை முன்னின்று வழங்குகிறார். தயாரிப்பு மதுரை அழகர் மூவிஸ் மற்றும் வொயிட் லேம்ப் பிக்ஷர்ஸ்.

வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வரும் ‘ஒரு நொடி’ படத்தில் ‘தொட்டால் தொடரும்’ பட நாயகனும் ‘அயோத்தி’ படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்தவருமான தமன் குமார் முற்றிலும் புதிய பாத்திரம் ஒன்றில் நாயகனாக நடிக்க, அவருடன் எம்.எஸ். பாஸ்கர், வேல ராமமூர்த்தி, பழ கருப்பையா, கஜராஜா, தீபா ஷங்கர், ஸ்ரீரஞ்சனி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றிருக்கின்றனர். ஒளிப்பதிவு இயக்குநராக கே.ஜி.ரத்தீஷ் பொறுப்பேற்க, கலை இயக்குனர் பணியை கவனிக்கிறார் எஸ்.ஜே. ராம். அறிமுக இசையமைப்பாளர் சஞ்சய் மாணிக்கமும் படத்தொகுப்பாளர் எஸ் குரு சூர்யாவும் படத்துக்கு தங்கள் பங்களிப்பை பலமாக செய்திருக்கிறார்கள்.

முதல் படத்திலேயே முத்திரை பதிக்க விரும்பும் இயக்குநர், ஆர்வமும் நேர்மையும் மிக்க புதிய தயாரிப்பாளர், வளர்ந்து வரும் இளம் நடிகர் பட்டாளம் என்று ஆர்வம் மிக்க இந்தக் கூட்டணி ‘ஒரு நொடி’ படத்தின் மூலம் திகில் மற்றும் மர்மம் நிறைந்த சஸ்பென்ஸ் கதை ஒன்றை புதிய கோணத்தில் சொல்லக் காத்திருக்கிறது. ரசிகர்கள் யூகிக்க முடியாத மர்ம முடிச்சுகள் படத்தின் இன்னொரு பலம்.

‘ஒரு நொடி’ படத்தின் போஸ்ட் புரடக்ஷன் பணிகள் முழுமையடைந்து, சென்சார் சான்றிதழ்காக காத்திருக்கிறது. இந்த படம் ஏப்ரல் 26 ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இப்படத்தை சென்னை மற்றும் செங்கல்பட்டில் பி.வி.ஆர். சினிமாஸ் நிறுவனமும், கோயபத்தூரில் திருப்பூர் சுப்ரமணியமும், வெளிநாடுகளில் டென்ட்கொட்டா நிறுவனமும் வெளியிடுகின்றனர். இப்படத்தின் ஆடியோ வெளியீடு மற்றும் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியிட இருக்கிறார்கள்.

ஒரு நொடி படத்தின் கதை ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Share.

Comments are closed.