சீயான் விக்ரமுடன் இணையும் பா.இரஞ்சித்!

0

 56 total views,  1 views today

சீயான் விக்ரமுடன் இணையும் பா.இரஞ்சித்!

அட்டகத்தி’, ‘மெட்ராஸ்’ திரைப்படங்கள் மூலம் கவனம் ஈர்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ‘கபாலி’, ‘காலா’ ஆகியப் படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக உயர்ந்தவர் டைரக்டர் பா. ரஞ்சித். சமீபத்தில் அவரது இயக்கத்தில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

தற்போது காளிதாஸ் , துஷாரா, கலையரசன் , ஹரி நடிப்பில் ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்கிற படத்தை இயக்கிவருகிறார். இறுதிக்கட்டபடப்பிடிப்பு நடைபெற்றுவருகிறது.

இன்னிலையில் சீயான் விக்ரமுடன் இணைந்து தனது அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார். அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது.

இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.

விரைவில் இப்படத்தின் தொழில் நுட்பகலைஞர்கள் மற்றும் நடிகர்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகும் .

Share.

Comments are closed.