“குப்பத்து ராஜா” படத்தில் பார்த்திபனுக்கேற்ற பாத்திரம்!

0

 547 total views,  1 views today

 
சென்னை சார்ந்த திரைப்படங்களின் முகமாக இருந்து வருகிறார் நடிகர் பார்த்திபன். அவரது படங்களில் பெரும்பாலானவை வடசென்னை பகுதி மக்களின் வாழ்க்கையை மிகச்சரியாக பிரதிபலிப்பவை. அவர் நடித்த படங்களோ அல்லது இயக்கிய படங்களோ, அவற்றில் பெரும்பாலானவை நேட்டிவிட்டியை உள்ளடக்கியவை. தற்போது வெளியாகவிருக்கும் அவரது படத்தின் தலைப்பு “குப்பத்து ராஜா” பார்த்திபன் குணாதியசத்துக்கு பொருத்தமாக அமைந்திருக்கிறது. முழுக்க அந்த பகுதியை சார்ந்த கதாபாத்திரமாகவே நடித்திருக்கிறார்.
 
இந்த படத்தை பற்றி அவர் கூறும்போது, “குடிசைப்பகுதியில் வசிக்கும் ஒரு ராஜாவாக நடிக்கிறேன், முக்கியமாக ஜி.வி.பிரகாஷுடன் தான் என் மோதல்கள் இருக்கும். இதை பற்றி சொன்னால், நான் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேனா என்ற ஒரு கேள்வி எழலாம். அதை பற்றி இப்போதைக்கு எதையும் சொல்ல இயலாது. எல்லோரும் ஜிவி பிரகாஷ் இசை மாயஜாலாத்தை கண்டு பிரமித்து போவார்கள். ஆனால் அவரின் உள்ளார்ந்த நடிப்பு திறன்களை கண்டு வியந்தேன். பல காட்சிகளில் மிக அழுத்தமான நடிப்பை அவர் மிக சாதாரணமாக வழங்கியதை நான் பார்த்தேன். கூடுதலாக, சண்டைக் காட்சிகளில் நிறைய முன்னேறியிருக்கிறார். இந்த படத்தில் அது குறித்து அதிகம் விவாதிக்கப்படும்” என்றார். 
 
இயக்குனர் பாபா பாஸ்கர் பற்றி கூறும்போது, “நான் எப்போதுமே பரபரப்பான திரைக்கதைகளை ரசிப்பவன். பாபா பாஸ்கர் அவரின் நடனத்தை போலவே திரைக்கதையையும் மிகவும் புதிதாக, வேகமாக வடிவமைத்திருந்தார். கதை சொல்லும் போது மிகவும் ரேஸியாக இருப்பதை உணர்ந்தேன், டப்பிங்கின் போது அவர் என்ன எழுதினாரோ அதை அப்படியே திரையில் கொண்டு வந்ததை பார்த்ததில் மகிழ்ச்சி” என்றார்.
 
ஏப்ரல் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் இந்த குப்பத்து ராஜாவில் ஜி.வி.பிரகாஷ், பார்த்திபன், பாலக் லால்வானி ஆகியோருடன் யோகி பாபு, பூனம் பஜ்வா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.  இந்த படத்தின் இசை ஏற்கனவே இசை ரசிகர்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது. மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் KL எடிட்டிங்கை கையாண்டுள்ளார்.
 
Share.

Comments are closed.