Tag: Kuppathu Raja
தரமான லோக்கல் படம் ‘குப்பத்து ராஜா’
எஸ் ஃபோகஸ் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஜிவி பிரகாஷ்குமார், பார்த்திபன், பாலக் லால்வானி, பூனம் பாஜ்வா, யோகிபாபு நடிக்க, பாபா பாஸ்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 'குப்பத்து ராஜா'. ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் ஏப்ரல் 5ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு படத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.
உண்மையாக உழைப்பவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். காலா, லூசிஃபர் படங்களில் இதற்கு முன்பு பாடல் எழுதியிருக்கிறேன். இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் மற்றும் பாபா பாஸ்கர் சார் இருவருமே என்னை மிகவும் ஊக்கப்படுத்தினர் என்றார் பாடலாசிரியர் லோகன்.
நானும் பார்த்திபனும் ஆரம்ப காலத்தில் இருந்தே நண்பர்கள். நான் துவண்டு போயிருந்த காலங்களில் என்னை ஊக்கப்படுத்தியவர் அவர். அவரை...
“குப்பத்து ராஜா” படத்தில் பார்த்திபனுக்கேற்ற பாத்திரம்!
சென்னை சார்ந்த திரைப்படங்களின் முகமாக இருந்து வருகிறார் நடிகர் பார்த்திபன். அவரது படங்களில் பெரும்பாலானவை வடசென்னை பகுதி மக்களின் வாழ்க்கையை மிகச்சரியாக பிரதிபலிப்பவை. அவர் நடித்த படங்களோ அல்லது இயக்கிய படங்களோ, அவற்றில் பெரும்பாலானவை நேட்டிவிட்டியை உள்ளடக்கியவை. தற்போது வெளியாகவிருக்கும் அவரது படத்தின் தலைப்பு "குப்பத்து ராஜா" பார்த்திபன் குணாதியசத்துக்கு பொருத்தமாக அமைந்திருக்கிறது. முழுக்க அந்த பகுதியை சார்ந்த கதாபாத்திரமாகவே நடித்திருக்கிறார்.
இந்த படத்தை பற்றி அவர் கூறும்போது, "குடிசைப்பகுதியில் வசிக்கும் ஒரு ராஜாவாக நடிக்கிறேன், முக்கியமாக ஜி.வி.பிரகாஷுடன் தான் என் மோதல்கள் இருக்கும். இதை பற்றி சொன்னால், நான் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேனா என்ற ஒரு கேள்வி எழலாம். அதை பற்றி இப்போதைக்கு எதையும் சொல்ல இயலாது. எல்லோரும் ஜிவி பி...
குப்பத்து ராஜா படத்தில் அறிமுகமாகும் பாலக் லால்வானி!
எந்த ஒரு கதாபாத்திரத்துக்கும் தன்னை தன்னியல்பாக உருமாற்றிக் கொள்வது தான் ஒரு கலைஞரை பாராட்ட வைக்கிறது. நிச்சயமாக, பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றம், அதை எளிதாக நம்ப வைக்கும் நடிப்பு தான் மிகவும் தேவையான விஷயம். அத்தகைய அனைத்து குணாதிசயங்களுடன், பாலக் லால்வானி ஏற்கனவே அனைவரது கவனத்தையும், குறிப்பாக குப்பத்து ராஜா ட்ரைலர் மூலம் ஈர்த்திருக்கிறார். ஏப்ரல் 5ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இந்த படத்தில் நடித்த அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.
"இந்த வாய்ப்பை ஒப்புக் கொண்டபோது, நான் உற்சாகம் மற்றும் பதட்டம் கலந்த ஒரு உணர்வைக் கொண்டிருந்தேன். இந்த படம் லோக்கல் பின்னணியில் இருந்ததால், அந்த ஏரியாவுக்கு ஏற்ற தமிழை மிகச்சரியாக பேச வேண்டும். கதாபாத்திரத்தை உண்மைக்கு மிகவும் நெருக்கமாக செய்ய வேண்டி இருந்தது. என் வசனங்களில் மிகவும் பொறுமையாகவும் உதவியாகவும் இருந்த இயக்குனர் பாபா பாஸ்கர் சா...
தனித்துவமான கதையம்சம் கொண்ட ‘குப்பத்து ராஜா’
அவரது நடனம் பார்வையாளர்களால் மிகவும் ரசிக்கப்பட்டு, புகழப்படுபவையாக இருந்தாலும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களால் 'டான்ஸ் மாஸ்டர் ' என்றே அழைக்கப்படுகிறார் பாபா பாஸ்கர். நவநாகரீக நடன அமைப்புகளை கொடுக்க அவர் பெரும் முயற்சிகள் எடுத்தாலும், உள்ளூர் விஷயங்களை கலந்து கொடுக்கவும் தவறியதில்லை. அதனால் தான் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்த நடன இயக்குனராகவும் இருக்கிறார். பல கொண்டாடப்படும் வெற்றி பாடல்களுக்கு நடனம் அமைத்த பாபா பாஸ்கர், குப்பத்து ராஜா படத்தின் மூலம் இயக்குனராகி இருக்கிறார்.
சமீபத்தில் வெளியான குப்பத்து ராஜா டிரெய்லர் 'லோக்கல்' பின்னணியை கொண்டிருக்கிறது என்று கூறப்படுகிறது, இது குறித்து பாபா பாஸ்கர் கூறும்போது, "உண்மையில் நான் 'லோக்கல்' என்ற வார்த்தையை ஏற்றுக் கொள்ளவில்லை, மாறாக அதை 'நேட்டிவிட்டி' என்று தான் அழைப்பேன். நம்மை சுற்றியுள்ள மக்கள் கிராமங...



