பாகுபலிக்குப் பின் புகழேணியின் உச்சத்துக்கே சென்ற பிரபாஸுக்கு இன்று பிறந்த நாள். அவரை ரசிக்கும் தீவிர ரசிகர்கள் இந்த நாளை ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ஒரு திருவிழாவாகவே கொண்டாடி மகிழ்கின்றனர்.
விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து நிற்கும் மெகா கட்அவுட்டுக்கு எப்படி பாலாபிஷேகம் செய்ய முடியும்?
கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும் பாதத்துக்கு பாலாபிஷேகம் செய்தால் அது சரியாக இருக்காதே… எனறு யோசித்திருப்பார்கள் போலும்…
“கொண்டு வாடா அந்த கிரேனை….” “எடுடா அந்த பாலகுடத்தை…” என்று சொல்லாமல் சொல்லி, கிரேனை வரவழைத்து, மின்தூக்கியைப்போல் மேலே சென்று பிரபாஸ் தலைப்பகுதியில் பாலாபிஷேகம் செய்கின்றனர்.
ஆந்திரா மட்டுமின்றி இந்தியா முழுக்கவே மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் பிரபாஸின் ‘சலார்’ திரைப்படத்தின் முதல் பகுதி Salaar: Part 1 – Ceasefire டிசம்பர் 22ஆம் தினத்தன்று வெளியாக இருப்பது ரசிகர்களின் கொண்டாட்ட மனநிலையை அதிகப்படுத்தியிருப்பதில் ஆச்சரியம் இல்லை.