458 total views, 1 views today
1998ஆம் ஆண்டு ஜீன்ஸ் கண்ணெதிரே தோன்றினாள் காதல் கவிதை ஆகிய படங்களின் மூலம் ஹாட்ரிக் வெற்றியை சுவைத்தவர் பிரசாந்த். தன் தந்தை தயாரித்திருக்கும் ஜானி படத்தின் மூலம் அடுத்த இன்னிங்ஸை ஆரம்பிக்கவிருக்கும் பிரசாந்த் 2019ஆம் ஆண்டு மீண்டும் ஒரு ஹாட்ரிக் சாதனைக்கு தயாராகி வருகிறார். ஆம் இம்மாதம் 14ஆம் தேதி திரைக்கு வரும் ஜானி படம் ரசிகர்களிடையே மட்டுமின்றி, திரையுலகைச் சேர்ந்தவர்களிடமும் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.
பத்திரிகையாளராகப் பணியாற்றிய வெற்றிச் செல்வனை இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகப்படுத்துகிறார் தியாகராஜன். சஞ்சிதா ஷெட்டி நாயகியாக நடிக்க பிரபு, ஆனந்த் ராஜ், அஷுதோஷ் ராணா, தேவதர்ஷினி, சயாஜி ஷிண்டே, ஆத்மா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.
எம.வி.பன்னீர் செல்வம் ஒளிப்பதிவு செய்திருக்கும் ஜானி படத்துக்கு இசையமைத்திருப்பவர் ஜெய் கணேஷ்.
தனது சொந்தப்பட நிறுவனமான ஸ்டார் மூவஸ் சார்பில் இப்படத்தைத் தயாரித்திருக்கிறார் தியாகராஜன்.
ஜானி டீஸரும் ட்ரைலரும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.