சிரிப்பு மூட்டும் சிவா!

0

Loading

24 ஹவர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் திருஞானம் இயக்க திரிஷா நாயகியாக நடிக்கும் ‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ப்ரி-புரோபோஷன் விழா சத்தியம் தியேட்டரில் நடந்தது. 

இதில் கலந்து கொண்டு பேசிய தயாரிப்பாளர் T. சிவா,  “நான் இன்னும் படம் பார்க்கவில்லை. ஆனால், படம் பார்த்த என் நண்பர்கள் சிறப்பாக இருக்கிறது என்று கூறினார்கள். இப்படிப்பட்ட படத்தின் விளம்பரத்திற்கு திரிஷா வரவில்லையென்பது வருத்தத்திற்குரிய விஷயம். தொடர்ந்து அவர் விளம்பரத்துக்கு ஒத்துழைப்பு  கொடுக்காவிட்டால் சம்பளத்தில் இருந்து ஒரு பகுதியை தயாரிப்பாளருக்கு திருப்பித்தர வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பாக எச்சரிக்கை விடுக்கிறேன்” என்றார்.

இதைக் கேட்டதும் திரையரங்கில் இருந்தவர்கள் நமட்டுச் சிரிப்பு சிரித்தனர். வாய்ச் சொல் வீரர் என்றால் அதற்கு இந்த சிவாவை உதாரணமாகக் காட்டலாம். இங்கே உதார் விடும் சிவா அவர் சொனனதை செய்து காட்டும் திராணி உள்ளவர்தானா?
இது இருக்கட்டும்… நயன்தாரா குறித்து இப்படி உதார் விட சிவாவுக்கு தெம்பு இருக்கிறதா என்று சிலர் முணுமுணுத்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கு வந்த தயாரிப்பாளர்கள் கே.ராஜன், சுரேஷ் காமாட்சி, எச்.முரளி போன்றவர்கள் படத்தை பார்த்துவிட்டு அதில் உள்ள விஷயங்களைப் பற்றி பேசினார்கள். அதுவும் இரவுக் காட்சி பார்க்க விரும்பாத எச்.முரளி, புரொமோஷன் நிகழ்ச்சிக்கு வரவேண்டும் என்பதற்காகவே இரவுக்காட்சியை பார்த்துவிட்டு வந்ததாகக் குறிப்பிட்டார்.
ஆனால் அம்மா கிரியேஷன்ஸ் சிவா படத்தையும் பார்க்காமல் வந்து மேடையேறியதுடன், நான் இன்னுப் படத்தைப் பார்க்கவில்லை என்று அதையும் மேடையிலேயே போட்டு உடைத்தார்.

 

 

Share.

Comments are closed.