கபடி குழுவை தத்தெடுக்கும் தயாரிப்பாளர்கள்!

0

 273 total views,  1 views today


கபடிப் போட்டியை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட வெண்ணிலா கபடிக்குழு 2 திரைப்படம், பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான முதல் பாகத்தைவிட சிறப்பாக உருவாக்கப்பட்டிருப்பதாக திரையலகினரிடையே பேசப்படுகிறது. நட்சத்திர நடிகர்கள் நடித்த படங்களே விநியோகஸ்தர்களிடம் விற்பனையாகாமல் திணறி வரும் நிலையில், அதிக பிரபலமில்லாத நடிகர் நடிகையர் நடித்திருக்கும் வெண்ணிலா கபடிக் குழு 2 படத்தின் திரையரங்க உரிமைகளை, மிகுந்த நம்பிக்கையுடன் பிக்சர் பாக்ஸ் நிறுவனம் சார்பில் அலெக்சாண்டர் பெற்றிறிருப்பதே படம் வெகு சிறப்பாக அமைந்திருப்பதற்கு சான்று என்று கூறுகிறார்கள்
இந்த நிலையில் படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளரும் இயக்குநருமான பி.டி.செல்வகுமார், திரையுலகைச் சேர்ந்தவர்கள் கபடி குழுக்களை தத்தெடுத்து ஆதரவு தர வேண்டும் என்றும், தான் அதுபோல் திருநெல்வேலியிலுள்ள கபடி குழு ஒன்றை தத்தெடுத்திருப்பதாகவும் பேசினார்.
இதைத் தொடர்ந்து பேசிய பிக்சர் பாக்ஸ் அலெக்ஸாண்டர் தானும் அதுபோல் கபடிக்குழு ஒன்றைத் தத்தெடுக்கத் தயாராக இருப்பதாகவும், தமிழர்களின் கலாச்சாரமாகத் திகழும் கபடிக்கு அனைவரும் ஆதரவு தரவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

 

Share.

Comments are closed.