வெங்கட்பிரபு தயாரித்த முதல் குறும்படம் ” இரா”

0

 594 total views,  1 views today

BLACK TICKET COMPANY மற்றும் WM PRODUCTIONS சார்பில் இயக்குனர் திரு.வெங்கட் பிரபு மற்றும் திரு.சரவண சுந்தரம் தயாரித்து, திரு.பொழிலன் இயக்கத்தில் உருவான ‘இரா’ குறும்படத்தின் திரையிடல் நிகழ்ச்சி சமீபத்தில் PRASAD PREVIEW THEATER இல் நடைபெற்றது. நிகழ்ச்சியை காண 600க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்திருந்தனர்.

இயக்குனர் சிம்புதேவன், ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன், படத்தொகுப்பாளர் பிரவீன் KL, இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன், எழுத்தாளர் விவேகா, நடிகர்கள் பிக் பாஸ் ஷாரிக், கயல் சந்திரன், அரவிந்த் ஆகாஷ் போன்ற திரைபிரபலங்கள் பலரும் வந்திருந்தனர். ‘இரா’ குறும்படத்தை கண்டு தங்களின் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். இக்குறும்படத்தின் மையக்கதையையும் அது படமாக்கப்பட்ட விதத்தையும் அனைவரும் பாராட்டினர்.

புதிய இயக்குனர்களை ஊக்குவிக்கும் விதமாக தான் இந்த குறும்படத்தை தயாரித்ததாக இயக்குனர் வெங்கட்பிரபு கூறினார் .

தயாரிப்பு – வெங்கட் பிரபு & சரவண சுந்தரம்
இயக்கம் – பொழிலன்
ஒளிப்பதிவு – ராபின் எழில்
படத்தொகுப்பு – செல்வா RK
இசை – ராபர்ட் சற்குணம்
கலை – பாக்கியராஜ் V
மற்றும் இதில் நடித்த நடிகர்கள் நன்றிகளோடு ‘இரா’ குரும்படத்தின் திரையிடல் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.

Share.

Comments are closed.