திருமணம் குறித்த வதந்திக்கு சிம்பு வைத்த முற்றுப்புள்ளி

0

 406 total views,  1 views today

சிம்பு வெளியிட்டிருக்கும் அறிக்கை

ஊடகம் மற்றும் செய்தியாளர்கள் மத்தியில் எனது பயணம் மற்றும் பிணைப்பு நீண்ட காலத்துக்குரியது. என் தொழில் வாழ்க்கையைக் கடந்தும் என் வாழ்க்கையில் அது முக்கியமான பங்காற்றியுள்ளது. அவர்களது அன்பும் ஆதரவும் இல்லாமல் லட்சக்கணக்கான குடும்பங்கள் என்னை அவர்களது குடும்பத்தில் ஒருவனாக, சகோதரனாக, மகனாக கருத இடமேயிருந்திருக்காது. என் வாழ்க்கையில் நான் சில பல மோசமான சூழ்நிலைகளில் முழுதும் ஆட்பட்டிருந்த போது இவர்கள்தான் எனக்கு தூணாக இருந்து ஆதரவளித்தனர், இதற்காக அவர்களுக்கு நான் கடன் பட்டிருக்கிறேன்.
இந்நிலையில் புது உறவுகளுடன் அதிக நேயத்துடன் என் குடும்பப் புகைபப்டம் பெரிய அளவில் வலம் வருவது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது. என் இளைய சகோதரர், என் சகோதரி குடும்ப வாழ்க்கையை அமைத்து கொண்டது என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துகிறது. இவர்களுக்காக அழகான தங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்த ஊடக நண்பர்களுக்கு நான் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது சொந்த மற்றும் தொழில்துறையினரிடத்தில் நிறைய ஊகங்களும் வதந்திகளும் நிறைந்திருக்கும். குறிப்பாக என் திருமணம் குறித்த சில வதந்திகள் என் காதுகளுக்கு வருகிறது. நான் தெளிவுபட கூற விரும்புகிறேன், அந்தமாதிரி திட்டங்கள் எதுவும் இப்போதைக்கு இல்லை, இது குறித்து ஏதேனும் முடிவோ, சம்மதமோ இருந்தால் அதனை நான் குறித்த நேரத்தில் குறித்த வழிமுறையில் தெரிவிப்பேன்
தொழில் துறை ரீதியாகவும் சில படங்களுடன் என்னைத் தொடர்பு படுத்தி நிறைய வதந்திகள் வருவதை அறிகிறேன். ஒரு நடிகராக சிலபல வலியுறுத்தும் சூழ்நிலைகளின் அழுத்தத்தில் சில தயாரிப்பாளர்களை நான் கேஷுவலாகச் சந்திக்கும் அவசியம் ஏற்பட்டது. அதனால் நான் பட வாய்ப்புக்காக பார்த்தேன் என்று பொருளல்ல. இந்தச் சந்திப்புகளையெல்லாம் எதிர்காலப் படங்கள் என்று வதந்திகள் பெரிய அளவில் புழங்கி ஏதோ அறிவிக்கப்பட்ட படங்களாகவே செய்திகள் வெளிவருகின்றன. இது போன்று கேள்விப்பட்டதையெல்லாம் செய்தியாக நம்புவது தொழிற்துறையையும் என் ரசிகர்களையும் தவறான வழிகாட்டுதலுக்கு இட்டுச் செல்கிறது. ஆனால் வதந்திகளை உண்மையென நம்பி அது நடக்காது போகும் போது ரசிகர்கள் அதிருப்தியும் ஏமாற்றமும் அடைகின்றனர்.
ஆகவே அப்படி படங்கள் ஏதாவது நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறேன் என்றால் அதை சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனம் முறையாக அறிவிக்கும் என்பதை ஒருநடிகராக இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். என்னுடன் நெருக்கமாக இருக்கும் ஊடகங்களுக்கும் என் ரசிகர்களுக்கும் நன்றியைத் தெரிவிக்கும் சந்தர்பமாக இதனை எடுத்துக் கொள்கிறேன்.

இவ்வாறு சிம்பு அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்

Share.

Comments are closed.