பாடகி சுசித்ரா மீது இசையமைப்பாளர் குற்றச்சாட்டு!
பாடகி சுசித்ராவை பாட வைத்து, “டைட்டானிக் சன்னி சன்னி” என்ற இசை ஆல்பத்தை உருவாக்கியுள்ளார் இசையமைப்பாளர் சக்தி ஆர் செல்வா.
பாடலை பாடி கொடுத்த பாடகி சுசித்ரா, பாடலின் பிரமோஷனுக்கு எந்த வித ஒத்துழைப்பும் கொடுக்கவில்லை. கொடுக்கவும் முடியாது என்று தீர்மானமாக கூறிவிட்டார். இதனால் மனம் வருந்திய இசையமைப்பாளர் சக்தி ஆர் செல்வா, பாடல் பதிவின் போது தன்னைப் பற்றி பெருமையாக சுசித்ரா பேசியுள்ள வீடியோவை, நான் இனி எந்த சூழ்நிலையிலும் பயன்படுத்த போவதில்லை என கூறிவிட்டார்.
நடிகர் கரண் நடித்த ‘கந்தா’ என்ற படத்திற்கு இசையமைத்தவர் சக்தி ஆர் செல்வா. உடல்நிலை சரியில்லாமல் சில காலம் ஓய்வில் இருந்த அவர், மீண்டும் சினிமாவில் இசை அமைப்பதற்காக,
“டைட்டானிக் சன்னி சன்னி” என்ற இந்த இசை ஆல்பத்தை தானே எழுதி, இசையமைத்து, சுசித்ராவுடன் டூயட் பாடினார். ஆனால் பாடலின் பிரமோஷனில் எனது பெயரை எந்த விதத்திலும் பயன்படுத்தக் கூடாது என்றும், தனக்கு பெண்கள் இடையே மிகப்பெரிய நல்ல பெயர் இருக்கிறது. அந்தப் பெயரை நீங்கள் ‘அறுவடை செய்யக்கூடாது’ என கூறிவிட்டார் சுசித்ரா.
இசையமைப்பாளர் சக்தி ஆர் செல்வா இதைப்பற்றி பேசுகையில்… ‘கவிஞர் வைரமுத்து, இயக்குனர் கே.பாலச்சந்தர், இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா என பல பிரபலங்களை சம்பந்தமே இல்லாமல், அவதூறாக பேசும் பாடகி சுசித்ரா, தான் பாடிய பாடலைப் பற்றி பேச மாட்டேன் என்கிறார்’ என்று ஆதங்கப்படுகிறார் இசையமைப்பாளர் சக்தி ஆர் செல்வா.
கடந்த இரண்டு வருடங்களாக சுசித்ராவிற்கு சரியான வாய்ப்பு இல்லாத சூழ்நிலையில் நான் அவர் குரலின் மீது வைத்திருந்த நம்பிக்கையில், அவரை பாட வைத்தேன். ஆனால் அவர் தனது புகழை, நான் அறுவடை செய்யக்கூடாது என பேசி, என் மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டார் என்கிறார் இசையமைப்பாளர் சக்தி ஆர் செல்வா.
பாடகி சுசித்ரா சில நேரங்களில் அம்பியாகவும், திடீரென அந்நியனாகவும் மாறுகிறார் எனறு குற்றச்சாட்டு வைக்கிறார் இசையமைப்பாளர் சக்தி ஆர் செல்வா.
@GovindarajPro