தலைப்பு சிக்ஸர் -கிரிக்கெட்டுக்கும் படக்கதைக்கும் சம்பந்தம் இல்லை!

0

Loading

சிக்ஸர் என்பது கிரிக்கெட் போட்டியில் ஒரு பந்தில் எடுக்கப்படும் அதிகபட்ச ரன் அதாவது 6 ரன்கள் எடுப்பதை குறிக்க பயன்படுத்தப்படுகிறது. நம் நாட்டில் கிரிக்கெட்டை ஒரு மதமாக கருதுகிறோம். அதை மனதில் வைத்து வைபவ் நடிக்கும் படத்துக்கு சிக்ஸர் என்ற தலைப்பை வைத்திருக்கிறார்கள் வால்மார்ட் எண்டர்டெயின்மெண்ட் தினேஷ் கண்ணன், ஸ்ரீதர் மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன். அறிமுக இயக்குனர் சாச்சி இயக்கும் இந்த படம் மிக விரைவாக படப்பிடிப்பை முடித்திருக்கிறது. 
 
“சிக்ஸர் தான் தலைப்பு என்றாலும் இந்த படத்துக்கும் கிரிக்கெட்ட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் ‘6’ சிக்ஸ் என்ற வார்த்தை திரைக்கதையில் மிக முக்கிய பங்கை வகிக்கிறது. பல புள்ளிகளை இது இணைக்கிறது. இந்த கதைக்கு பக்கத்து வீட்டு பையன் போன்ற தோற்றம் கொண்ட, அதை திறம்பட செய்யும் வைபவ் மிக பொருத்தமாக இருந்தார். பல்லக் லால்வானி நாயகியாக நடிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்க, பிஜி முத்தையா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். நல்ல துடிப்பான இளைஞர்கள் குழு, கதையிலும், மிகச்சிறப்பாக படத்தை முடிக்கவும் உறுதுணையாக இருந்தது. படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் மிக வேகமாக நடந்து வருகின்றன, கோடை விடுமுறையின் இரண்டாம் பாதியில் படத்தை வெளியிட திட்டமிட்டு வருகிறோம். தலைப்புக்கு ஏற்றவாறே நாங்கள் சிக்ஸர் அடிக்க முயற்சித்திருக்கிறோம். ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவிந்திரன் சார் இந்த படத்தை வணிக அளவில் கொண்டு சேர்க்க மிகவும் உறுதுணையாக இருக்கிறார், அவருக்கு எங்கள் நன்றி” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்கள் தினேஷ் கண்ணன் மற்றும் ஸ்ரீதர்.
 
Share.

Comments are closed.