கராத்தெ போட்டியில் தங்கப் பதக்கம் பெற்ற ஸ்டண் சிவா மகன்கள்…

0

 187 total views,  1 views today

சினிமாவின் ரசிப்புதன்மைக்கு பின்னால் பலரது கடினமான உழைப்பு இருக்கும்.அதிலும் சண்டை பயிற்சியாளர்கள் தங்களின் இரத்ததை சிந்தி மக்களை மகிழ்விப்பார்கள . தமிழ் சினிமாவில் நேர்த்தியான பயிற்சியாளர்களில், stun சிவாவின் காட்சி அமைப்பிற்கு என்று தனி ரசிகர்கள் உள்ளனர். இளைய தலைமுறைக்கு தங்களின் கலையை எடுத்து செல்லும் சமகால சண்டை பயிற்சியாளர்கள் பெருமை சேர்க்கும் விதமாக, தற்போது நடந்த 37 ஆவது தமிழ்நாடு கராத்தே சங்கத்தின் மாநில அளவிலான கராத்தெ போட்டியில் , சிவாவின் மகன்கள் கவின் குமார் மற்றும் Steven குமார் இருவரும் 70 மற்றும் 76 கிலோ பிரிவில் தங்கப்பதக்கத்தை தட்டி சென்றனர் . மாநில தலைவர் கராத்தே தியாகராஜன் வெற்றி யாளர் சான்றிதழ் மற்றும் பதக்கத்தை வழங்கினார். இப்பெருமைக்குரிய நிகழ்வு 10.1.2019- 13.1.2019 வரை சென்னை கிழ்ப்பாக்கத்தில் உள்ள JJ உள்விளையாட்டு அரங்கில் விமரிசையாக நடந்தது. 
கராத்தே சங்கத்தின் இயக்குனர் திரு. கனகராஜ், பொருளாளர் திரு.அல்தாப் ஆலம் மற்றும் பெருமைக்குரிய தந்தை Stun சிவாவும் கலந்து கொண்டனர்.

 

Share.

Comments are closed.