யு ட்யுப் சினிமா விமர்சனங்களுக்கு நாளுக்கு நாள் ரசிகர்களிடையே வரவேற்பு அதிகரித்து வருகிறது. பெரும்பாலும் சினிமா நிருபர்கள் அல்லது யு ட்யுப் நடத்துபவர்களே சினிமா விமர்சனங்களை செய்து வரும் நிலையில் சூப்பர் ராயல் டி.வி. என்ற யு ட்யுப் சேனல் கவர்ச்சி நடிகை ஷகிலாவை வைத்து செய்த விமர்சனங்களுக்கு ரசிகர்களிடம் மட்டுமின்றி திரையுலகைச் சேர்ந்தவர்களிடமும் மிகுந்த வரவேற்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து இப்போது மற்றொரு யு ட்யுப் சேனல் பாக்கியராஜை வைத்து சினிமா விமர்சனம் செய்ய இருக்கிறதாம்.