![]()
உயிருள்ளவரை உஷா திரையரங்குகளில் வெளியாகி நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டன.
ஆனால் என்றென்றும் புதுமை குன்றாத, இளமை ததும்பும் காதல் காதல் கதை 'உயிருள்ளவரை உஷா' என்பதை இப்போது படத்தை பார்த்தாலும் உணரலாம்.
கதை,திரைக்கதை,வசனம் மற்றும் பாடல்களை எழுதி இசையத்து இயக்கத்திற்கும் பொறுப்பேற்ற டி. ராஜேந்தர், படத்தின் தொழில் நுட்ப நேர்த்தியின் பின்னால் இருந்து முத்திரை பதிப்பதுடன்,செயின் ஜெயபால் என்ற அட்டகாசமான பாத்திரத்தில் திரையில் தோன்றி அமர்க்களப்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நளினி மற்றும் கங்கா ஆகியோரை பிரதான பாத்திரங்களில் அறிமுகப்படுத்தி இருந்தார் இயக்குனர் டி. ராஜேந்தர்.
உயிருள்ளவரை உஷா படத்தின் ரீ_ரிலீஸ் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலைப்புலி எஸ்.தாணு, ஆர்.கே. செல்வமணி, நளினி, ராதாரவி மற்றும் இயக்குனர் விக்ரமன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்!
முத்தாய்ப்பாக பேசிய இயக்குனர் டி.ராஜேந்தர் பட உருவாக்கத்தின் போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை சுவைபட பகிர்ந்து கொண்டார்.
