Friday, October 23

Tag: தவம் – விமர்சனம்

தவம் – விமர்சனம்

தவம் – விமர்சனம்

Reviews
சென்னையில் சிட்பண்ட் நடத்தும் சந்தான பாரதி, தனது மகளின் திருமணத்தை முன்னிட்டு ஊழியர்கள் அனைவருக்கும் ஒரு வாரம் விடுமுறை கொடுத்து தன் சொந்த கிராமத்துக்கு அழைத்துச் செல்லத் திட்டமிடுகிறார். அன்னை வயல் என்ற அந்த கிராமத்தின் பெயரைக் கேட்டதும் கதாநாயகி பூஜாஸ்ரீ மனதில் ஓர் இனம் புரியாத மகிழ்ச்சி. திட்டமிட்டபடி அனைவரும் அந்த கிராமத்துக்குச் சென்று மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிக்கும்போதுதான் பூஜாஸ்ரீக்கு அந்த கிராமத்துடன் இருந்த உறவு தெரிய வருகிறது. தற்போது விவசாயம் பட்டுப்போயிருந்தாலும், ஒரு காலத்தில் சீரும் சிறப்புமாகத்தான் இருந்திருக்கிறது அந்த கிராமத்தில். விவசாயத்தை தவம்போல் நினைத்து செய்யும் சீமான், ஊர் மக்களுக்கு ஒரு பிரச்னை என்றால் ஓடோடி வருபவர். கிராமத்து தாதாபோல் வலம் வரும் விஜய் ஆனந்த், கார்ப்பரேட் நிறுவனம் ஒன்று அந்த கிராமத்தில் தொழிற்சாலை கட்ட துணை நிற்கிறார். இதற்காக அரசு அதிகார...