டென் ஹவர்ஸ் _ விமர்சனம்
டென் ஹவர்ஸ் _ விமர்சனம்
ஆத்தூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருக்கும் சிபிராஜ், சபரிமலைக்கு விரதம் இருந்து புறப்படும் நாளன்று ஒரு பெண்ணை காணவில்லை என்று புகார் வருகிறது.
காணாமல் போன பெண்ணை தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் சிபிராஜ்.
அந்த இரவு 10 மணி நேரத்தில் ஓடும் பேருந்தில் ஒரு கொலை நடக்கிறது.
இந்த கொலைக்கான காரணம் என்ன? கொலையாளி யார்? குற்றவாளியை சிபிராஜ் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதுதான் டென் ஹவர்ஸ் படத்தின் கதை.
நெற்றியில் திருநீறு பூசிக்கொண்டு புலன் விசாரணையை துவங்கும் இன்ஸ்பெக்டர் சிபிராஜின் மிடுக்கு, கம்பீரம் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்திற்கு கணம் சேர்க்கிறது.
மொத்த படம் முழுவதும் சிபிராஜின் ஆட்சி தான்.
சிபிராஜுடன் வரும் சப்-இன்ஸ்பெக்டர் கஜராஜ் படத்தின் இரண்டாவது கதாநாயகன் என்று சொன்னால் மிகையாகாது.தன் பாத்திரத்தை உணர்ந்து அழகாக நடித்து கவ...
