2018 – திரைப்பட விமர்சனம்
2018 - திரைப்பட விமர்சனம்
2018ஆம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட பெருமழை - வெள்ளத்தில் நிரம்பி வழிந்த அணை திறக்கப்பட்டதால் உருவான பிரளயத்தில் சிக்கிக்கொண்ட மனிதர்களைப்பற்றியும், அவர்கள் அதிலிருந்து எவ்வாறு மீள்கிறார்கள் என்பதைப்பற்றியும் பதைபதைக்க வைக்கும் காட்சிகளோடு சொல்லியிருக்கும் திரைப்படம் 2018.
இயல்பு வாழ்க்கையை புரட்டிப்போட்ட மழை வெள்ளத்திலும் மனித நேயம் மரித்துப் போகாமல் மக்கள் பேராபத்தை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை அழகாக காட்சிப்படுத்தியதற்காகவே இந்தப் படக்குழுவுக்கு ஒரு பாராட்டு விழாவே நடத்தலாம்.
படத்தின் டேக் லைனாக எவ்ரிஒன் ஈஸ் எ ஹீரோ என்று போட்டிருப்பதற்கேற்ப படத்தில் வரும் பாத்திரங்கள் பலரும் தங்கள் உயிரை துச்சமென மதித்து ஆபத்தில் சிக்கியிருப்பவர்களை காப்பாற்றி நிஜமான ஹீரோவாக உருவெடுப்பதை ஆழமான சம்பவங்களோடு மிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
சற்ற...
