Tuesday, November 17

Tag: A.R.Rahman

16 அடி பாயும் குட்டிப்புலி ஏ ஆர் அமீன்!

16 அடி பாயும் குட்டிப்புலி ஏ ஆர் அமீன்!

News
இசைத்துறையில் பலராலும் திறமை வாய்ந்த புதுப் பாடகர் எனக் கருதப்படும் ஏ ஆர் அமீன், தமிழில் அவரது முதல் சுயாதீன பாடலான சகோவை சோனி மியூசிக் நிறுவனத்துடன் இணைந்து வெளியிட்டுள்ளார். காதல் பற்றியும் நட்பைப் பற்றியும் பேசும் இப்பாடலுக்கு இசை மேதை ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்பாடலை விவேக் மற்றும் ஏ டி கே (ADK) இணைந்து எழுதியுள்ளனர். இப்பாடலை ஏ.ஆர் ரஹ்மான் மற்றும் ஏ ஆர் அமீன் தயாரித்துள்ளனர். இப்பாடலின் முழு வீடியோவை இயக்கி இருப்பது அமித் கிருஷ்ணன். இந்த வீடியோவில் அமீன் பாடுவது அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை கொள்ளும் விதமாக அமைந்திருக்கிறது. இப்பாடலைப் பற்றி  அமீன் கூறும்பொழுது,"நான் என் இசைப் பயணத்தை சகோ உடன் தொடங்குவதில் பெரும் மகிழ்ச்சியும் உற்சாகமும் கொள்கிறேன். இப்பாடலை தந்தையுடன் சேர்ந்து தயாரிப்பது பெரும் சவாலாக இருந்தது. ஆனால், அதே சமயம் பெரும் மகிழ்ச்சியையும் அளித்தது...
ஷாங்காய் சர்வதேச திரைப்படவிழாவில்  ‘சர்வம் தாளமயம்’ !

ஷாங்காய் சர்வதேச திரைப்படவிழாவில் ‘சர்வம் தாளமயம்’ !

News
இயக்குனர் ராஜீவ் மேனன் இயக்கத்தில், ஏ ஆர் ரஹ்மான் இசையில் ஜி வி பிரகாஷ் குமார், நெடுமுடி வேணு, அபர்ணா பாலமுரளி மற்றும் பலர் நடித்த ‘சர்வம் தாளமயம்’ தமிழ் திரைப்படம், ‘சர்வதேச பனோரமா’ பிரிவில், 2019ம் ஆண்டுக்கான 22வது ஷாங்காய் சர்வதேச திரைப்படவிழாவிற்கு அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மதிப்பு மிக்க இத்திரைப்படவிழா, ஜூன் மாதம் 15ம் தேதி, அதாவது இன்று முதல் 24 தேதி வரை நடைபெறுகிறது....
மார்வெல் ஆன்தம் உருவாக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்!

மார்வெல் ஆன்தம் உருவாக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்!

News
இந்தியாவின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் உடன் இணைந்து அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் படத்துக்காக அவரது முத்திரை பதிக்கும் இசையை உருவாக்க கைகோர்த்துள்ளது மார்வெல் இந்தியா. ஆஸ்கார் நாயகன் ரஹ்மான் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் ஒரு புதிய கீதத்தை இந்திய மார்வெல் ரசிகர்களுக்காக உருவாக்கியிருக்கிறார். இந்த பாடல் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி வெளியிடப்படும். நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் வெளிவர இருக்கும் அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் படத்துக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இதுவே இந்த படத்தை ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக்கியிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக, இந்திய ரசிகர்கள் மார்வெல் சூப்பர் ஹீரோக்களை மிகவும் விரும்பி பார்க்கிறார்கள். அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் படத்தின் மிகப்பெரிய வெற்றியே இதை பறைசாற்றுகிறது. தானோஸ் கிரகத்திலிருக்கும்  மக்கள் தொகையை பாதியாக்க...
விஜய் ஜோடியாக நயன்தாரா

விஜய் ஜோடியாக நயன்தாரா

News
தனி ஒருவன், கவன் உள்ளிட்ட பல பிரம்மாண்ட வெற்றி படங்களை தயாரித்து வெளியிட்ட கல்பாத்தி S அகோரம் அவர்களின் ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தற்போது தளிபதி விஜய் நடிப்பில், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், அட்லி இயக்கத்தில் உருவாகவிருக்கும் "தளபதி 63" படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பாக கல்பாத்தி S. அகோரம், கல்பாத்தி S.கணேஷ், கல்பாத்தி S.சுரேஷ் தயாரிக்கின்றனர். தற்போது வில்லு படத்திற்கு பிறகு தளபதி விஜயுடன் நடிகை நயன்தாரா "தளபதி 63" படத்தில் ஜோடி சேரவுள்ளார். பல உச்ச பிரபலங்கள் பணியாற்றும் இப்படத்தில் நடிகை நயன்தாராவின் வரவு, "தளபதி 63" படத்திற்கான எதிர்பார்ப்பை மென்மேலும் கூட்டியுள்ளது. தொழில்நுட்ப கலைஞர் விவரம்: தயாரிப்பு - கல்பாத்தி S. அகோரம், கல்பாத்தி S.கணேஷ், கல்பாத்தி S...