‘ஆரோமலே’ திரைப்படத்தின் இன்ட்ரோ ஃபீல் க்ளிம்ப்ஸ் வெளியீடு!
ஆரோமலே – தமிழ் சினிமாவில் புதிய ரொமான்ஸ் அலை! இன்ட்ரோ ஃபீல் க்ளிம்ப்ஸ் வெளியீடு!
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரொமான்டிக் காமெடி படம் ‘ஆரோமலே’ மிக விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்திலிருந்து இன்ட்ரோ ஃபீல் க்ளிம்ப்ஸ் தற்போது வெளியாகி உள்ளது. இது காதல், நகைச்சுவை மற்றும் உணர்வுகளால் நிரம்பிய உலகத்துக்குள் ரசிகர்களை அழைத்துச் செல்கிறது.
முழுக்க முழுக்க நகைச்சுவை மற்றும் இதயம் தொடும் ரொமான்ஸை இணைத்து உருவாக்கப்பட்ட ‘ஆரோமலே’, தமிழ் சினிமாவில் பெரும் இடைவெளிக்குப் பிறகு ரொமான்டிக் காமெடி வகை படமாக வெளியாக உள்ளது.
பழம்பெரும் நடிகர் தியாகுவின் மகனான சரங் தியாகு இந்த படத்தை இயக்கியுள்ளார். மினி ஸ்டுடியோ எனும் தனது தனியார் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் எஸ். வினோத் குமார் தயாரித்துள்ளார். சித்து குமார் இசை ரசிகர்களை கவர்ந்து பாடல்கள் ஹிட் அடிக்கும் நிலையில், பின்னணி இசையும் படத்தி...
