சிங்கப்பெண்களை மையப்படுத்தி உருவாகியுள்ள ‘ஆட்டி’
“அந்த வார்த்தையை விஜய் பின்பற்றுகிறாரோ இல்லையோ நான் பின்பற்றுகிறேன்” _ ஆட்டி’ பட தயாரிப்பாளரும் நடிகருமான இசக்கி கார்வண்ணன்!
சமீப காலத்தில் கருத்து ரீதியாக ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் ஒருசேர வரவேற்பைப் பெற்ற ‘பெட்டிக்கடை’, தமிழ்க் குடிமகன், ‘பரமசிவன் பாத்திமா’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்து இயக்கியவர் இயக்குநர் இசக்கி கார்வண்ணன். ஒரு நடிகராகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ள இவர் தற்போது லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ள படம் ‘ஆட்டி’.
இந்தப் படத்தில் தயாரிப்பாளர் இசக்கி கார்வண்ணனே கதையின் நாயகனாக ஒரு காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘அயலி’ புகழ் அபி நட்சத்திரா கதாநாயகியாக நடிக்க, காதல் சுகுமார், சௌந்தர், பிரவீன் பழனிச்சாமி மற்றும் பல முக்கிய நடிகர்கள் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
“எங்கள் குலத்தில் பெண்களே முதலானவர்கள்” என்கிற கருத்தை மையப்படுத்தி ...
