Tag: Abi Saravanan
முதல்வர், பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கு நடிகர் அபி சரவணனின் கோரிக்கை !
தமிழ்நாடு அரசு இன்று 500 புதிய ஆம்புலன்ஸ்-களின் சேவையை துவக்கியுள்ள நிலையில் முதல்வர், பிரதமர் மற்றும் ஜனாதிபதி அவர்களுக்கு அபி சரவணன் கோரிக்கை!
கடந்த இரு வாரங்களில் ஆறு மரணச்செய்தி.. அதில் மூன்று எனது நெருங்கிய குடும்ப உறவினர்கள்..அனைத்து மரணங்களும் தீடீர் மாரடைப்பு..
ஒரு மரணத்தை நேரடியாக கண்டவன் என்ற முறையிலும் அந்த உயிர் பிரியும் போது ஆம்புலன்ஸ்க்கு நான்குமுறை அழைத்தும் பயனளிக்காமல் நேரமின்மையால் கையாலாகமால் சித்தப்பா உயிரை பறிகொடுத்து கண்ணீரோடு நின்றவன் என்ற முறையிலும் வலிகளுடன் இந்த பதிவு...
இந்த பதிவு
பாரதபிரதமர்
உயர் திரு. #நரேந்திரமோடிஜீ அவர்கள்
இந்திய குடியரசுத்தலைவர்
உயர் திரு. #ராம்நாத்கோவிந்த் அவர்கள்
தமிழக முதல்வர்
உயர்திரு . #எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்
தமிழக சுகாதாரதுறை அமைச்சர்
உயர்திரு. #விஜயபாஸ்கர் அ...
இரண்டாவது முறையாக 500 இலங்கை அகதிகளுக்கு உதவிய அபி சரவணன்!
ஊரடங்கு எதிரொலியாக வறுமையில் வாடிய இலங்கை அகதிகளுக்கு இரண்டாவது முறையாக 500 குடும்பங்களுக்கு 13 வகையான காய்கறிகளை வழங்கிய நடிகர் அபி சரவணனுக்கு குவியும் பாராட்டு.
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், பொதுமக்கள் வீடுகளில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மதுரை ஆனையூர் பகுதியில் இலங்கை அகதிகள் முகாமில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அவர்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாமல் வறுமையில் வாடுவதாக நடிகர் அபி சரவணனுக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதனை தொடர்ந்து அபி சரவணன் அவருடைய நண்பருடன் இணைந்து முதல்கட்டமாக கடந்த வாரம் 600 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்களான அரிசி பருப்பு உள்ளிட்ட வற்றை வழங்கினார்.
இந்நிலையில் இரண்டாவது முறையாக 500 குடும்பங்களுக்கு தேவையான 13 வகையான காய்கறிகள...
பிறந்தநாளில் ‘மாயநதி’ அபி சரவணனுக்கு கிடைத்த மூன்று விருதுகள்!
'சோஷியல் ஸ்டார்' விருது, 'மதுரை சிட்டிசன் 2020' விருது மற்றும் 'மாயநதி பட வெற்றி விருது' என மூன்று விருதுகளை தனது பிறந்தநாளில் பெற்றார் அபி சரவணன்.
'கேரளா நாட்டிளம் பெண்களுடனே' படம் மூலம் கதாநாயகனான அறிமுகமான நடிகர் அபி சரவணன் தொடர்ந்து டூரிங் டாக்கீஸ், பட்டதாரி படங்களின் மூலம் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
ஜல்லிக்கட்டு போராட்டம், நெடுவாசல் மீத்தேன் போராட்டம், விவசாயிகள் போராட்டம் என அனைத்து சமூக நிகழ்வுகளிலும் இவர் தொடர்ந்து காட்டிவரும் அக்கறையும் அர்ப்பணிப்பு உணர்வும் திரையுலகினரிடமும் மக்களிடமும் இவரை இன்னும் நெருக்கமாக்கி விட்டன.
இந்நிலையில் கடந்த வாரம் வெளியான மாயநதி திரைப்படம் அபி சரவணனின் யதார்த்த நடிப்பு மக்கள் மத்தியிலும் பத்திரிகையாளர்கள் மத்தியிலும் பாராட்டைப்பெற்றது. இதனை தொடர்ந்து செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்களை மாயநதி படக்குழுவ...



