ஏஸ் _ விமர்சனம்
மலேசியாவில் வேலை பார்க்கும் யோகி பாபு, அங்கு வரும் விஜய் சேதுபதியை தனது உறவினர் என்று தவறாக நினைத்து அடைக்கலம் கொடுக்கிறார்.
ஹோட்டல் ஒன்றில் வேலைக்கு சேரும் விஜய் சேதுபதி, எதிர் வீட்டில் வசிக்கும் காவல்துறை அதிகாரி பப்லுவின் மகளான ருக்மணியை காதலிக்கிறார்.
காதலிக்கு விலை உயர்ந்த ஆடை ஒன்றை பரிசளிப்பதற்காக வட்டிக்கு கடன் வாங்க செல்கிறார்.
அப்போது அங்கு நடக்கும் பெரிய அளவிலான சூதாட்டத்தில் பங்கு கொண்டு ஆரம்பத்தில் ஜெயிக்கிறார்.
பின்னர் பணம் அனைத்தையும் வில்லன் அவிநாசிடம் இழந்து வசமாக சிக்கிக் கொள்கிறார்.
அதே சமயம் யோகி பாபுவின் தோழி வாங்கிய கடனை அடைக்க, யோகி பாபுவுக்கும் பெரிய தொகை தேவைப்படுகிறது.
இந்தப் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்ப்பதற்காக வங்கிப் பணத்தை கொள்ளையடிக்க திட்டமிடுகிறார் விஜய் சேதுபதி.
தனி ஒருவனாகவே சென்று வங்கிப் பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு, யோகி பாபு தயாராக இர...
