Wednesday, October 21

Tag: Actor Arulnithi

சன் நெக்ஸ்ட் தளத்தில் தீபாவளி கொண்டாட்டமாக வெளியாகிறது “ராம்போ” !

சன் நெக்ஸ்ட் தளத்தில் தீபாவளி கொண்டாட்டமாக வெளியாகிறது “ராம்போ” !

News
சன் நெக்ஸ்ட் தளத்தில் தீபாவளி கொண்டாட்டமாக வெளியாகிறது “ராம்போ” ! தென் இந்தியாவின் முன்னணி OTT தளங்களில் ஒன்றான சன் நெக்ஸ்ட், தனது அடுத்த நேரடி OTT வெளியீடாக “ராம்போ” திரைப்படத்தை, வரவிருக்கும் தீபாவளி சிறப்பு படமாக அக்டோபர் 10ஆம் தேதி வெளியிடுகிறது. அருள்நிதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தை, கொம்பன், குட்டிப்புலி, புலிக்குத்தி பாண்டி, விருமன் போன்ற அழுத்தமான கிராமப்புற கமர்ஷியல் படங்களைத் தந்த, புகழ் பெற்ற இயக்குநர் முத்தையா இயக்கியுள்ளார். தன் வழக்கமான பாணியிலிருந்து விலகி, இம்முறை நகர வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கியுள்ள “ராம்போ” நகர பின்னணியில் ஒரு அதிரடி ஆக்சன் கமர்ஷியல் பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ளது. ஒரு தைரியமான இளம் குத்துச்சண்டை வீரன், ஒரு பெண்ணுக்கு (தன்யா ரவிச்சந்திரன்) உதவ முயற்சிக்கும் போது தொடங்கும் கதை, அதன்பின் அவன் வாழ்க்கையில் நடக்கும் ...
3 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளுடன் அமோக வரவேற்பு பெற்று வரும் ‘கழுவேத்தி மூர்க்கன்’ டீசர்

3 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளுடன் அமோக வரவேற்பு பெற்று வரும் ‘கழுவேத்தி மூர்க்கன்’ டீசர்

News
ஒலிம்பியா மூவிஸ் அம்பேத் குமார் வழங்கும், 'ராட்சசி' புகழ் சை கௌதமராஜ் இயக்கத்தில், அருள்நிதி-துஷாரா விஜயன் நடித்துள்ள 'கழுவேத்தி மூர்க்கன்' படத்தின் டீசர் 3 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளுடன் அமோக வரவேற்பு பெற்று வருகிறது! நடிகர் அருள்நிதி தனது ஒவ்வொரு திரைப்படத்திலும், பாக்ஸ் ஆபிஸில் ஒரு வெற்றி நட்சத்திரமாக தனது அந்தஸ்தை உயர்த்திக் கொண்டே இருக்கிறார். மேலும், தனித்துவமான கதை அம்சம் கொண்ட திரைக்கதைகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் தன் படங்களைத் திரையரங்குகளுக்குப் பார்க்க வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையையும் அதிகரித்துள்ளார். அவரது முந்தைய படங்களின் வெற்றி இதையே நிரூபிக்கிறது. தற்போது, சை கௌதமராஜ் இயக்கத்தில், ஒலிம்பியா மூவீஸின் அம்பேத் குமார் தயாரிப்பில் ‘கழுவேத்தி மூர்க்கன்’ திரைப்படத்தின் மூலம் நீண்ட நாட்களுக்குப் பிறகு கிராமப்புற பின்னணியில் நடக்கும் கதைக்களத்தில் அடியெடுத்து வைத்துள்ள...
பெரும் வரவேற்பை பெற்ற அருள்நிதி நடிக்கும் ‘டைரி’ பட டிரெய்லர்!

பெரும் வரவேற்பை பெற்ற அருள்நிதி நடிக்கும் ‘டைரி’ பட டிரெய்லர்!

News
நடிகர் அருள்நிதி நடிப்பில் சமீபத்தில் அடுத்தடுத்து வெளியான “டி பிளாக், தேஜாவு” படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்த நிலையில், தனது அடுத்த படத்தின் ரிலீஸுக்கு பரபரப்பாக தயாராகி விட்டார் அருள்நிதி. அவரது நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள “டைரி” படத்தை Five Star Creations LLP சார்பில் S கதிரேசன் தயாரிப்பில் இன்னாசி பாண்டியன் இயக்கியுள்ளார். 2.25 நிமிடங்கள் ஓடும் இப்படத்தின் டிரெய்லர் இப்படம் புதுவிதமான திரைக்கதையில் ரசிகர்களை இருக்கை நுனியில் வைத்திருக்கும் திரில் பயணம் என்பதை உறுதி செய்துள்ளது. இபடத்தின் டிரெய்லர் வெளியீடு இந்தியாவின் மிகப்பெரும் பிரபலங்களான கமல்ஹாசன், விக்ரம், அமீர் கான் உடன் மேலும் பலர் கலந்து கொண்ட விழாவில் சமீபத்தில் நடந்தேறியது. “டைரி” டிரெய்லர் வெளியான வேகத்தில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதில் படக்குழு உற்சாகமாக உள்ளது 2022 தொடர்ந்து பல வெற்றிப்படங்களை த...
“எரும சாணி” புகழ் விஜய்யுடன் இணைந்த நடிகர் அருள்நிதி ! 

“எரும சாணி” புகழ் விஜய்யுடன் இணைந்த நடிகர் அருள்நிதி ! 

News
வித்தியாசமான கதைக்களங்கள், தரமான திரைக்கதைகள், மாறுபட்ட கதாபாத்திரங்கள் என தன்மீதான வெளிச்சத்தை எப்போதும் அழகாக நிலை நிறுத்தி வருபவர் நடிகர் அருள்நிதி. தற்போது அதன் மீட்சியாக இணைய உலகில் “எரும சாணி” மூலம்  புகழ் பெற்ற  விஜய் குமார் ராஜேந்திரன் இயக்கும் படத்தில் இணைந்துள்ளார். ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் MNM Films சார்பில் இப்படத்தை தயாரிக்கிறார். ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர் அரவிந்த் சிங் படம் குறித்து கூறியதாவது.... இப்படம் கல்லூரி வாழ்வின்  பின்னணியில் உண்மையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படுகிறது. ஆரம்பத்தில் விஜய் இந்தக்கதையை கூறியபோதே அதில்  பல உற்சாகமிகு  தருணங்களுடன் பரபரப்பும்   நிறைந்திருந்தது. இந்தப்படத்தின்  திரைக்கதையை முடித்தவுடன் நாங்கள்  முதல் வேலையாக நடிகர் அருள்நிதியை தான் அணுகினோம். எப்போதும் தரமான பரிட்சார்த...