மெட்ராஸ் மீட்டர்ஸின் லூசுப் பொண்ணு
கடந்த சில நாட்களுக்கு முன்பு யு ட்யூபில் பதிவேற்றப்பட்டமெட்ராஸ் மீட்டர்ஸின் லூசுப் பொண்ணு வீடியோ பார்வையாளர்களியே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறு. ஏழு நிமிடங்கள் ஓடும் இந்தக் குறும்படத்தைப் பார்ப்பவர்கள் லைக் போட்டு சப்ஸ்க்ரைப் செய்துவிடுவது உறுதி.
மூன்றே கதாபாத்திரங்கள்தான். இயக்குனர் இங்க்மர் பெர்க்மனுக்கும் நடிகை இங்க்மர் பெர்க்மனுக்கும் வித்தியாசம் தெரியாத தமிழ்ப்பட இயக்குநர் ஒருவரையும், வாய்ப்பு தேடி வரும் புதுமுகத்தையும் வைத்து இன்றைய தமிழ்ப்பட சூழலை இதைவிட அழகாகப் பகடி செய்ய முடியாது.
ராஜா ராமமூர்த்தி கற்பனைக்கு மிக அழகாக திரைவடிவம் கொடுத்திருக்கிறார் இயக்குநர் குருராஜ். படத்தொகுப்பையும் இவரே செய்திருக்கிறார்.
"முற்றிலும் சீரமைக்கப்பட்ட மெட்ராஸ் மீட்டர்ஸ்க்கு இது இரண்டாவது சீசன் என்றே சொல்லலாம். பெரும் எண்ணிக்கையில் வளர்ந்து வரும் பார்வையாளர்களே இந்த வளர்ச்ச...
