Monday, October 26

மெட்ராஸ் மீட்டர்ஸின் லூசுப் பொண்ணு

Loading

கடந்த சில நாட்களுக்கு முன்பு யு ட்யூபில் பதிவேற்றப்பட்டமெட்ராஸ் மீட்டர்ஸின் லூசுப் பொண்ணு  வீடியோ பார்வையாளர்களியே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறு. ஏழு நிமிடங்கள் ஓடும் இந்தக் குறும்படத்தைப் பார்ப்பவர்கள் லைக் போட்டு சப்ஸ்க்ரைப் செய்துவிடுவது உறுதி.
மூன்றே கதாபாத்திரங்கள்தான். இயக்குனர் இங்க்மர் பெர்க்மனுக்கும் நடிகை இங்க்மர் பெர்க்மனுக்கும் வித்தியாசம் தெரியாத தமிழ்ப்பட இயக்குநர் ஒருவரையும், வாய்ப்பு தேடி வரும் புதுமுகத்தையும் வைத்து இன்றைய தமிழ்ப்பட சூழலை இதைவிட அழகாகப் பகடி செய்ய முடியாது.
ராஜா ராமமூர்த்தி கற்பனைக்கு மிக அழகாக திரைவடிவம் கொடுத்திருக்கிறார் இயக்குநர் குருராஜ். படத்தொகுப்பையும் இவரே செய்திருக்கிறார்.
“முற்றிலும் சீரமைக்கப்பட்ட  மெட்ராஸ் மீட்டர்ஸ்க்கு இது இரண்டாவது சீசன் என்றே சொல்லலாம். பெரும் எண்ணிக்கையில் வளர்ந்து வரும் பார்வையாளர்களே இந்த வளர்ச்சியை எங்களுக்கு வழங்கியிருக்கிறார்கள். அதற்கு கைமாறாக இன்னும் சிறப்பான நிகழ்ச்சிகளை தொடர்ந்து நாங்கள் வழங்கவிருக்கிறோம்.
திரைப்பட நட்சத்திரங்கள் சம்பத் இந்துஜா நடித்திருக்கும் லூசுப்பொண்ணு வீடியோவைப்போல் இன்னும் பல திரைநட்சத்திரங்களின் வீடியோக்கள் எங்கள் தயாரிப்பாக வரவிருக்கிறது. ருசியான உணவு வகைகளைத் தயாரிக்கும்சமையல் குறிப்பு நிகழ்ச்சியில் தொடங்கி தரமான நகைச்சுவையைத் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடிவரை அனைத்தையும் சுவைபட பார்வையாளர்களுக்குப் படைக்கவிருக்கிறோம்” என்கிறார் ட்ரெண்ட்லௌட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எம்.சிதம்பரம்.

 

டெயில் பீஸ்
முப்பது வருடத்துக்கு முந்தைய ஜோக் என்றாலும் இப்போதுகூட ரசிக்கலாம். பிரபல தமிழ் நடிகையை பேட்டி எடுக்கிறார் ஒரு செய்தியாளர். பேட்டியின் முடிவில் உங்கள் உடை மிகவும் நன்றாக இருக்கிறது என்று சொல்கிறார் செய்தியாளர்.
அருகிலிருக்கும் நடிகையின் தாயார்:  “இருக்காதா சார் பின்னே. ஹாலிவுட்டிலிருந்து எலிசபெத் டைலர் இல்லையா பாப்பாவின் ட்ரஸ்களை டிசைன் செய்து அனுப்புகிறார்”