Friday, November 13

Tag: Actor Karthi

‘தேவ்’ படத்தில் வந்த பைக்கை வென்றவர்கள் யார்?

‘தேவ்’ படத்தில் வந்த பைக்கை வென்றவர்கள் யார்?

News
'தேவ்' படத்தின் இருசக்கர வாகனப் போட்டியில் சுமார் 8 லட்சம் மதிப்புள்ள BMW இருசக்கர வாகனங்களைப் பரிசாக வென்று பிரபலமாகியிருக்கிறார்கள் நவீன் குமாரும், அபர்ணாவும். கார்த்தி - ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் காதலர் தினமான பிப்ரவரி 14, 2019 அன்று வெளியான 'தேவ்' படத்தில் கார்த்தி, BMW பைக்கை ஓட்டிக்கொண்டு வருவார். அந்த பைக்கை வெல்வதற்காக சில கேள்விகள் அடங்கிய போட்டியில் - நீங்களோ அல்லது உங்கள் குடும்பத்திலோ அல்லது நண்பர்களோ சிறப்பானவர்களாக இருந்தால் 8 லட்சம் மதிப்புள்ள BMW சூப்பர் பைக்கை வெல்லலாம் என்று கூறியிருந்தார்கள். இது தவிர 'தேவ்' படத்தைப் பற்றி சில கேள்விகளுக்கு 100 வார்த்தைகளுக்கு மிகாமல் பதிலளிக்க வேண்டும். சிறந்த பதிலளித்த நவீன் குமார் மற்றும் அபர்ணா இருவரும் தேர்வு தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் இருவருக்கும் தலா 8 லட்சம் மதிப்புள்ள புதியதாக பதிவு செய்யப்பட்ட BMW பைக்கை நடிகர் கார்...
கார்த்தி நடிக்கும் புதிய படம்…

கார்த்தி நடிக்கும் புதிய படம்…

News
கார்த்தி நடிக்கும் புதிய படம் விரைவில் ஆரம்பமாகிறது. “K19”  என்கிற பெயர் சூட்டப்படாத இப்படம்,  எமோஷன், ஆக்‌ஷன் கலந்த காமெடி கதையாக, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் விதமாக  உருவாகவுள்ளது. இதற்காக சென்னையில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், தமிழ்நாடு உட்பட ஹைதராபாத்திலும் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. அனைத்து குடும்பத்தினரிடமும் பெரும் ஆதரவு பெற்ற கார்த்தியின் 'சிறுத்தை', 'கடைக்குட்டி சிங்கம்' ஆகிய படங்கள் போன்று இப்படமும் அனைவரையும் கவரும் என்று இப்படத்தை S.R.பிரகாஷ்பாபு, S.R.பிரபு இணைந்து தயாரிக்கும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தினர் கூறுகின்றனர்.    இப்படத்தை பாக்யராஜ்கண்ணன் இயக்குகிறார். காதல், காமெடி என 'ரெமோ' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இவர் இயக்கும் இரண்டாவது படம் இது.    இதில் ரஷ்ம...