Wednesday, November 18

Tag: Actor Karthi

நடிகர் கார்த்தியை பார்க்க நேரில் வந்த ஜப்பான் ரசிகை !

நடிகர் கார்த்தியை பார்க்க நேரில் வந்த ஜப்பான் ரசிகை !

News
இந்திய திரைப்பிரமாண்டமாக, அனைத்து பக்கமும் பொன்னியின் செல்வன் பாகம் 2 வெற்றியை பெற்றுள்ளது. பாகம் 1 இன் எதிர்ப்பார்ப்பை கடந்து ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை இப்படம் பெற்றுள்ளது. இப்படத்தினை முதல் நாள் முதல் ஷோ பார்ப்பதற்காக தம்பதி சகிதமாக ஜப்பானிலிருந்து சென்னைக்கு வந்திருக்கிறார் நடிகர் கார்த்தியின் ரசிகை. பொதுவாக சூப்பர்ஸ்டார் ரஜினி படத்தின் முதல் நாள் ஷோவுக்கு தான் இம்மாதிரி ஆச்சர்யங்கள் நடக்கும். ஆனால் தற்போது நடிகர் கார்த்தியின் ரசிகை ஜப்பானிலிருந்து வருகை தந்திருப்பது கோடம்பாக்கத்தை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜப்பானிலிருந்து வருகை புரிந்த தெருமி ககுபரி ஃபுயுஜிடா ( Terumi Kakubari Fujieda ) வை நடிகர் கார்த்தி வீட்டுக்கு வரவைத்து அவருக்கு உணவு பரிமாறி உரையாடி மகிழ்ந்துள்ளார். இந்த சந்திப்பு குறித்து ரசிகை தெருமி ககுபரி ஃபுயுஜிடா ( Terumi Kakubari Fujieda ) கூறும்பொழுது.....
செம்பனை உடையில் பொறித்த கார்த்தி !!

செம்பனை உடையில் பொறித்த கார்த்தி !!

News
பொன்னியின் செல்வன் கதையில் வந்தியத்தேவனோடு பயணிக்கும் செம்பன் குதிரையை உடையில் பொறித்து அணிந்திருக்கிறார் நடிகர் கார்த்தி. இந்தியத் திரை பிரமாண்டத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்திய பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனையொட்டி படக்குழுவினர் சோழா சுற்றுலா பயணமாக இந்தியாவெங்கும் பயணித்து படத்தை விளம்பரப்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு நடிகர்களின் பேச்சும் உடையும் என எங்குத் திரும்பினாலும் பொன்னியின் செல்வன் மட்டுமே. இந்த விளம்பர நிகழ்வுகளில் நடிகர் கார்த்தி படத்தில் வந்தியத்தேவனோடு பயணிக்கும் குதிரை செம்பனை உடையில் பொறித்து வித்தியாசம் காட்டியிருக்கிறார். பொன்னியின் செல்வன் கதையில் நாவல் முழுக்க பயணிக்கும் ஒரே பாத்திரம் வந்தியத்தேவன். அந்த வந்தியத்தேவனோடு பயணிக்கும் மற்றொரு பாத்திரம் செம்பன் குதிரை. அந்த குதிரையி...
“தமிழ்த் திரையுலகம் உலக அரங்கில் பெரும் அலைகளை உருவாக்கும் திறனைக் கொண்டுள்ளது” கார்த்தி பெருமிதம்!

“தமிழ்த் திரையுலகம் உலக அரங்கில் பெரும் அலைகளை உருவாக்கும் திறனைக் கொண்டுள்ளது” கார்த்தி பெருமிதம்!

News
இன்று காலை சென்னையில் நடைபெற்ற சிஐஐ தக்‌ஷின் விழாவில் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக கார்த்தி கலந்துக் கொண்டு பேசியது: தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின், சிஐஐ தலைவர் மற்றும் என் அன்பு நண்பர் திரு சங்கர் வானவராயர் மற்றும் இன்று கூடியிருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் அன்பான காலை வணக்கம். தமிழகம் வரலாறு ரீதியாகவும் பாரம்பரியமாகவும் இலக்கியம், கவிதை, இசை, நடனம் மற்றும் நாடகம் போன்ற கலை வடிவங்களின் மையமாக இருந்து வருகிறது. சென்னையின் கரைகளை சினிமா எப்போது தொட்டதோ, அப்போதிலிருந்தே மேடை நாடகத்தின் உச்ச நட்சத்திரங்களான பி.யு.சின்னப்பா, எம்.கே. தியாகராஜ பாகவதர், டி.ஆர்.மகாலிங்கம், எஸ்.ஜி.கிட்டப்பா மற்றும் அவரது மனைவி கே.பி.சுந்தராம்பாள் உள்ளிட்டோரை உடனடியாக தன்பால் ஈர்த்துக் கொண்டது. தமிழ் சினிமாவின் ஆரம்ப காலகட்டத்தில் அதன் கதைகள் பெரும்பா...
நடிகர் கார்த்தியின் சேவைகளைப் பாராட்டிய நடிகர் ராஜ்கிரண்!

நடிகர் கார்த்தியின் சேவைகளைப் பாராட்டிய நடிகர் ராஜ்கிரண்!

News
சமீபத்தில் உழவன் பவுண்டேசன் மூலம் உழவர் விருதுகள் வழங்கினார், நடிகர் கார்த்தி. விவசாயத்திற்காக பல்வேறு வகையில் மாபெரும் பங்களித்து வருபவர்களை கெளரவப்படுத்தி ​​தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சாதனையாளர்களுக்கு உழவர் விருது மற்றும் ரூபாய் 1 இலட்சத்திற்கான காசோலை வழங்கப்படடது. அந்த நிகழ்ச்சியில் நடிகர் ராஜ்கிரண் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விவசாயிகளை கவுரவப் படுத்தினார். இதை பற்றியும் , நடிகர் கார்த்தி பற்றியும் சமீபத்தில் அவரது முக நூலில்.. "கலைஞர்களுக்கு சமூகப்பொறுப்பு மிக மிக அவசியம்.." என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று எழுதியுள்ளார். கலைஞர்களுக்கு சமூகப்பொறுப்பு மிக மிக அவசியம். அதை உணர்ந்திருப்பதால் தான், அண்ணன் சிவகுமார் அவர்களின் புதல்வர்கள், தம்பி சூர்யா அவர்கள், "அகரம் பவுண்டேஷன்" மூலமாக கல்வி உதவிகளைச்செய்து வருகிறார். தம்பி கார்த்தி அவர்கள், "உழவன் பவுண்டேஷன்" ...
“2022ன் சிறந்த ஆளுமை நடிகர் கார்த்தி” – விஜய் டிவி தேர்வு!

“2022ன் சிறந்த ஆளுமை நடிகர் கார்த்தி” – விஜய் டிவி தேர்வு!

News
பிரபல விஜய் தொலைக்காட்சி ( Vijay TV ) நிகழ்ச்சியான நீயா நானா, நடிகர் கார்த்திக்கு சிறந்த ஆளுமை 2022 என்கிற கவுரவத்தை வழங்கியுள்ளது. நடிகர் கார்த்தி அவரது உழவன் ஃபவுண்டேஷன் மூலம் செய்து வரும் சமூக பணிகளுக்கும், விருமன், பொன்னியின் செல்வன் 1 மற்றும் சர்தார் என அடுத்தடுத்து மூன்று வெற்றிப் படங்கள் கொடுத்ததற்காகவும் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சிறந்த களப்பணி ஆற்றி வரும் விவசாயிகளை அடையாளம் கண்டு, வெளியுலகுக்கு அவர்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவதே தன்னார்வத் தொண்டு நிறுவனமான உழவன் அமைப்பின் நோக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சமூகம் குறித்தும், தமிழர் பெருமை குறித்தும் வெவ்வேறு தளங்களில் தொடர்ந்து தனது குரலை அழுத்தமாகப் பதிவு செய்து வருவதற்காகவும் நடிகர் கார்த்திக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. அவர், எப்படித் தொடர்ந்து சமூகப் பொறுப்புள்ள கதைகளைத் தேர்வு செய்து, வெவ்வேறு கதா...
“சர்தார்“ இரண்டாம் பாகம்” – உற்சாகமாக அறிவித்த கார்த்தி !

“சர்தார்“ இரண்டாம் பாகம்” – உற்சாகமாக அறிவித்த கார்த்தி !

News
“சர்தார்“ படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகிறது, உற்சாகமாக அறிவித்த கார்த்தி ! தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான கார்த்திக்கு இந்த வருடம் அவரது திரை வாழ்வில் பொன்னான வருடமாக அமைந்துள்ளது. விருமன், பொன்னியின் செல்வன் மற்றும் தீபாவளி ரிலீசாக வெளியான ‘சர்தார்’ படங்கள் பிரமாண்ட வெற்றியை பெற்றுள்ளன. சர்தாரின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக, சர்தார் பட வெற்றிவிழா சந்திப்பில் நடிகர் கார்த்தி அறிவித்தார். இவ்வாண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியான விருமன் படத்தில் கரடுமுரடான தோற்றத்தில் கிராமத்து மனிதனாக மிரட்டியிருந்தார் கார்த்தி. அதைத்தொடர்ந்து தமிழ் சினிமாவின் நீண்ட வருட கனவு திரைப்படமாக, இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படத்தில் முதன்மை பாத்திரமான வந்தியதேவன் பாத்திரத்தில், அப்படியே ராஜா காலத்து ஒற்றனாக மக்களின் ...
ரசிகர்கள் முன்னிலையில் வெளியிடப்படும் ’விருமன்’ படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர்!

ரசிகர்கள் முன்னிலையில் வெளியிடப்படும் ’விருமன்’ படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர்!

News
2D நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிக்க, முத்தையா இயக்கத்தில், கார்த்தி நடித்துள்ள படம், ’விருமன்’. இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் , இந்தப் படம் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார். இதில், ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், வடிவுக்கரசி, சரண்யா, கருணாஸ், சூரி உட்பட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தை நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. வரும் 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படத்தின் ’கஞ்சா பூவு கண்ணால’ பாடல் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் மற்றப் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, ரசிகர்கள் முன்னிலையில் வரும் 3ம் தேதி நடக்கிறது. மதுரை, ராஜா முத்தையா அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடக்கும் இந்த விழாவில், இயக்குநர் பாரதிராஜா, இய...
இரு வேடங்களில் கார்த்தி நடிக்கும் “சர்தார்”

இரு வேடங்களில் கார்த்தி நடிக்கும் “சர்தார்”

News
தமிழின் முன்னணி நட்சத்திரமான கார்த்தி, பிரபல இயக்குநர் P.S.மித்ரனுடன் முதன்முறையாக இணையும் “சர்தார்” படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னையில் நடைபெற்று வருகிறது. சென்னையெய் தொடர்ந்து கொடைக்கானல் காட்டுப்பகுதிகளிலும், மைசூர் காட்டுப்பகுதியிலும் படப்பிடிப்பு நடக்கவுள்ளது. இதில், ஸ்டண்ட் காட்சிகளை பிரமாண்ட அளவில் எடுக்க ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் திட்டமிட்டுள்ளார். பிரமாண்டமான ஆக்‌ஷன் மற்றும் ஜனரஞ்சக அம்சங்களைக் கொண்டு குடும்பங்களை கவரும் மாஸ் கமர்ஷியல் திரைப்படமாக உருவாகும் #சர்தார் படத்தின் படப்பிடிப்பு தீவிரமடைந்துள்ளது. ‘சர்தார்’ படத்திலிருந்து சமீபத்தில் வெளியான கார்த்தியின் தோற்றம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறிய நிலையில், படம் முடிவடையும் முன்னதாகவே படத்தின் டிஜிட்டல் உரிமையை ஆஹா நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடதக்கது. ...

கையெழுத்து வேட்டை நடத்தும் நடிகர் கார்த்தி!

News
   தினமும் நாம் சாப்பிடும் உணவில் உள்ள நச்சுத்தன்மைகள் குறித்துப் பல்வேறு செய்திகளைப் படித்து தினசரி படித்து வருகிறோம். நடிகர் கார்த்தி படிப்பதோடு நின்றுவிடாமல், அதைத் தடுக்கும் வகையில் பல்வேறு முயற்ச்சிகளை எடுத்து வருகிறார். தற்போது உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், மரபணு மாற்றப்பட்ட மற்றும் மரபணுவிலிருந்து உருவாக்கப்படும் உணவுகள் மீதான ஒழுங்குமுறைகளை மாற்றவுள்ளது. இதுகுறித்த இணைய வழிக் கையெழுத்து இயக்கத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்தக் கையெழுத்து இயக்கத்தில் கார்த்தியும் கையெழுத்திட்டுள்ளார். மேலும், இதற்கு அனைவரது ஆதரவும் வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து கார்த்தி பகிர்ந்துள்ள செய்தி: "உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், மரபணு மாற்றப்பட்ட மற்றும் மரபணுவிலிருந்து உருவாக்கப்படும் உணவுகள் மீதான ஒழுங்குமுறைகளை மாற்றவுள்ளது. ...
‘கைதி’ படம் வெளியீடு குறித்து கொண்டாட்ட மனநிலையில் கார்த்தி ரசிகர்கள்!

‘கைதி’ படம் வெளியீடு குறித்து கொண்டாட்ட மனநிலையில் கார்த்தி ரசிகர்கள்!

News
கார்த்தி நடிப்பில் தீபாவாளிக்கு வெளியாகும் கைதி பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது. வெளியீட்டுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ரசிகர்கள் டிரெய்லரை கொண்டாடி வருகின்றனர். அஞ்சாதே புகழ் நரேன் படத்தில் இப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து ஒரு  முக்கியமான பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருடன் ஒரு சிறு நேர் காணல்... தமிழில் சில காலமாக நீங்கள் படம் செய்யவில்லையே ஏன் இந்த இடைவெளி ? தெரியவில்லை திட்டமிட்டு எதுவும் செய்யவில்லை நல்ல படத்திற்காக காத்திருந்தேன். நான் கடைசியாக நடித்த படம் யூ டர்ன். அதற்குப்பிறகு அதர்வாவுடன் ஒத்தைக்கு ஒத்தை படத்துல ஒரு கேரக்டர் நடிச்சுருக்கேன். ஃபிளாஷ்பேக்ல ஹீரோ மாதிரி ரத்தினம்னு ஒரு கேரக்டர். சுசீந்தரன் சாரோட சாம்பியன் படத்தில நடிச்சுருக்கேன் இரண்டும் ரெடியாகிட்டு இருக்கு. இது போன வருஷத்துல பண்ணினது. எனக்கே ஆச்சர்யம்  கைதி தான் பெரிய படம். ...