Friday, May 1

Tag: actor Madhavan

25 ஆண்டுகள் கழித்து ரீ ரிலீஸ் ஆகும் மாதவனின் ‘மின்னலே’!

25 ஆண்டுகள் கழித்து ரீ ரிலீஸ் ஆகும் மாதவனின் ‘மின்னலே’!

News
பிப்ரவரி 13 ஆம் தேதி மாதவனின் 'மின்னலே' படத்தை ரீ ரிலீஸ் செய்யும் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல்! சி டிவி என்டர்டெயின்மென்ட் லிமிடெட் நிறுவனம் சார்பில் டாக்டர் முரளி மனோகர் தயாரிப்பில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மாதவன் - ரீமா சென் நடிப்பில் உருவான திரைப்படம் 'மின்னலே'. கடந்த தசாப்தங்களில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்ற முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்கள் தற்போது ரீ ரிலீஸ் ஆவது லேட்டஸ்ட் ட்ரெண்ட். அந்த வகையில் மாதவன் - கௌதம் வாசுதேவ் மேனன் - ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் உருவான 'மின்னலே ' திரைப்படம்- காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 13 ஆம் தேதி தமிழகம் முழுவதும் மீண்டும் வெளியாகிறது. இந்த திரைப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ராகுல் வெளியிடுகிறார். மின்னலே - இந்த திரைப்படத்தின் மூலம் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்குநராக அறிமுகமானார் என்பதும், 'அலைபாயுதே...
“ஒரு நடிகனாக ‘லெகஸி’ என்னை குஷிப்படுத்தியது”- நடிகர் மாதவன்!

“ஒரு நடிகனாக ‘லெகஸி’ என்னை குஷிப்படுத்தியது”- நடிகர் மாதவன்!

News
"ஒரு நடிகனாக 'லெகஸி' என்னை குஷிப்படுத்தியது"- நடிகர் மாதவன்! வலுவான குற்றப் பின்னணியைக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த வயதான ஒரு பெரியவர், தனது வலிமைமிக்க சாம்ராஜ்யத்தை தவிர்க்க முடியாத ஒரு பிரச்சினையில் இருந்து பாதுகாக்க ஒரு வாரிசை நியமிக்கப் போராடுகிறார். அவர் குடும்பத்தையும், தனது சாம்ராஜ்யத்தையும், மிக முக்கியமாக தனது பாரம்பரியத்தையும் காப்பாற்ற போராடுகிறார். நெட்ஃபிலிக்ஸ் ஒரிஜினல்ஸாக குடும்ப கேங்ஸ்டர் மற்றும் வாரிசுரிமையை மையமாகக் கொண்டு நகரும் தமிழ் சீரிஸ் 'லெகஸி'. ஆர். மாதவன், நிமிஷா சஜயன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தத் தொடரை சாருகேஷ் சேகர் இயக்கி இருக்கிறார். இது குறித்து இயக்குநர் சாருகேஷ் சேகர் பகிர்ந்து கொண்டதாவது, "'லெகஸி' எனக்கு மிகவும் பர்சனல். நான் நினைத்ததை கொண்டு வர படைப்பு சுதந்திரம் கொடுத்த நெட்ஃபிலிக்ஸ் மற்றும் ஸ்டோன் பென்ச் நிறுவனத்திற்கு நன்ற...
மாதவன் நடித்த  ‘ஆப் ஜெய்சா கோய்’ !

மாதவன் நடித்த ‘ஆப் ஜெய்சா கோய்’ !

News
ஆர். மாதவன் நடிப்பில், குடும்ப பார்வையாளர்களைக் கவரும் வகையில் உருவாகியுள்ள ‘ஆப் ஜெய்சா கோய்’ படத்தின் டிரெய்லரை நெட்ஃபிலிக்ஸ் வெளியிட்டுள்ளது! *மும்பை, 25 ஜூன் 2025*: 42 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் தனது சொந்த வாழ்க்கையின் விதிகளை மீண்டும் எழுதத் தொடங்கினால் என்ன ஆகும்? ஸ்ரீரேணு திரிபாதியாக ஆர். மாதவனும், மது போஸாக பாத்திமா சனா ஷேக்கும் நடித்திருக்கும் ’ஆப் ஜெய்சா கோய்’ (’உன்னைப் போல் ஒருவர்’) படத்தின் டிரெய்லரை நெட்ஃபிலிக்ஸ் வெளியிட்டுள்ளது. எதிர்பாராத சூழ்நிலைகளில் நமக்கு கிடைக்கும் துணை, காதல் மற்றும் தோழமை ஆகியவற்றைக் கொண்டாடும் ஃபேமிலி டிராமாவாக இது உருவாகி இருக்கிறது. ஜாம்ஷெட்பூர் மற்றும் கொல்கத்தாவில் இது படமாக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய பழக்கவழக்கங்களை பின்பற்றி வளர்ந்த ஸ்ரீரேணு திரிபாதி ஆண்மை, தோழமை மற்றும் உணர்ச்சி வெளிப்பாடு பற்றிய நீண்டகாலமாக தனது நம்பிக்கைகளை மறுபரிசீலனை செய்...
மாதவன் – மித்ரன் ஆர் ஜவஹர் கூட்டணியில் உருவான ‘அதிர்ஷ்டசாலி’!

மாதவன் – மித்ரன் ஆர் ஜவஹர் கூட்டணியில் உருவான ‘அதிர்ஷ்டசாலி’!

News
மாதவன் நடிப்பில் உருவாகி இருக்கும் அதிர்ஷ்டசாலி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் மாதவன். நடிப்பு மட்டுமின்றி இயக்கத்திலும் கவனம் செலுத்திய மாதவன் தற்போது அதிர்ஷ்டசாலி என்ற படத்தில் நடித்துள்ளார். யாரடி நீ மோகினி, திருச்சிற்றம்பலம் போன்ற வெற்றி படங்களை இயக்கிய மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் அதிர்ஷ்டசாலி உணர்வுபூர்வமான கதையம்சம் கொண்டிருக்கிறது. அதிர்ஷ்டசாலி படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக சமீபத்தில் நிறைவு பெற்றது. மேலும், இந்த படத்தின் இறுதிகட்ட வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் பலருடைய கவனத்தை ஈர்த்து வைரலாகி உள்ளது. ஃபேண்டசி டிராமா கதையம்சம் கொண்டு உருவாகும் அதிர்ஷ்டசாலி திரைப்படத்...
ஆஸ்கர் விருது 2023 பரிந்துரைப் பட்டியலில் ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்!

ஆஸ்கர் விருது 2023 பரிந்துரைப் பட்டியலில் ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்!

News
நடிகர் மாதவன் இயக்குநராக அறிமுகமான 'ராக்கெட்ரி' திரைப்படம் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது, ஆஸ்கர் விருது 2023 பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்ததன் மூலம் இந்தத் திரைப்படம் மீண்டும் தலைப்புச் செய்தியாகியுள்ளது. கடந்த 2022ம் வருடம் ஜூலை 1ம் தேதி வெளியாகி பார்வையாளர்களிடையே வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக, உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு சவால் மிகுந்த உண்மை சம்பவங்களை இயக்குநர் மாதவன் படமாக்கி இருந்தார். நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் அற்புதமான வேலை மற்றும் ஆர். மாதவனின் அற்புதமான திரைக்கதை ஆகியவை விமர்சகர்கள் மற்றும் பொது பார்வையாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றன. அதற்கு மற்றுமொரு அங்கீகாரம் சேர்க்கும் வகையில் படம் ஆஸ்கர் விருது 2023 படங்கள் பரிந்துரைப் பட்...
17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்த ஜோடி!

17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்த ஜோடி!

News
பல ஆண்டுகளாகவே, ஒரு சில தலைப்புகள் சினிமாவில் பதிலளிக்கப்படாமல் இருக்கின்றன, ஆனால் அவை வியப்புக்குரியவை. அவற்றில் ஒன்று வெள்ளித்திரையில் தோன்றும் ஜோடிக்கு இடையே உள்ள கெமிஸ்ட்ரி. அது ஒரு குறிப்பிட்ட காலம் மட்டுமல்லாமல், திரைப்படம் வெளியாகி பல ஆண்டுகளுக்கு பின்னரும், அவர்களின் திரைப்படங்களை நாம் பார்க்கும் போது நம்மை அறியாமல் வியக்க வைக்கிறது. வெளிப்படையாக, எப்போதும் இளமையான மாதவன் மற்றும் காலம் கடந்தாலும் அதே அழகு மற்றும் இளமையுடன் இருக்கும் சிம்ரன் போன்ற ஒரு கவர்ச்சியான ஜோடி நம்மை 'பார்த்தாலே பரவசம்' (2001) மற்றும் 'கன்னத்தில் முத்தமிட்டால்' (2002) ஆகிய படங்களில் அவர்களை ரசிக்க வைத்தார்கள். உண்மையில், இந்த படங்கள் அவர்களை வெறும் ஜாலியான காதல் ஜோடிகளாகக் காட்டவில்லை, மாறாக சிக்கலான சூழ்நிலைகளை எதிர்கொள்பவர்களாக இருந்தனர். நிச்சயமாக, அதுதான் அழகு அல்லவா? சோதனைகள் மற்றும் இன்னல்கள் கடினமான இர...