வாழ்வு தொடங்கும் இடம் நீதானே _ விமர்சனம்
வார்த்தைகளுக்கிடையே ஏற்படும் சந்திப்பிழை போல் வாழ்க்கையில் ஏற்பட்ட சந்ததிப் பிழைகள் இவர்கள்...
என்று அரவாணிகள் குறித்து கவிதை ஒன்று எழுதி இருப்பார் கவிஞர் நா.காமராசன்.
நீதிமன்றங்களில் எல் ஜி பி டி சமூகம் குறித்தான விவாதங்களும் அவர்களுக்கான உரிமைகள் குறித்து வழக்குகளும் நடைபெற்று வரும் காலமும் சூழலும் நிலவி வருவதை தற்போது பார்க்கிறோம்.
தீபா மேத்தா இயக்கிய பெயர் Fire படத்தில் ஷப்னா ஆஸ்மியும், நந்திதா தாஸும் தன் பாலின ஈர்ப்பால் உந்தப்பட்டு உறவு கொள்ளும் காட்சியொன்று மிக அழகாகவும் ஆழமாகவும் அழகியல் ரீதியாகவும் சிறப்பாக படம் ஆக்கப்பட்டு இருக்கும்.
'வாழ்வு தொடங்கும் இடம் நீதானோ' என்று அழகான கவிதையைப் போல் தலைப்பு வைத்துவிட்டு தன்பாலின சேர்க்கையாளர்களை பற்றி போதிய புரிதல் இல்லாமல் அரைவேக்கட்டுத்தனமாக படம் எடுத்து வைத்திருக்கிறார்களோ என்ற இயக்குனர் ஜெயராஜ் பழனியை பற்றியும் படக்குழுவினரைப் பற்...
