Saturday, November 14

வாழ்வு தொடங்கும் இடம் நீதானே _ விமர்சனம்

Loading

வார்த்தைகளுக்கிடையே ஏற்படும் சந்திப்பிழை போல் வாழ்க்கையில் ஏற்பட்ட சந்ததிப் பிழைகள் இவர்கள்…

என்று அரவாணிகள் குறித்து கவிதை ஒன்று எழுதி இருப்பார் கவிஞர் நா.காமராசன்.

நீதிமன்றங்களில் எல் ஜி பி டி சமூகம் குறித்தான விவாதங்களும் அவர்களுக்கான உரிமைகள் குறித்து வழக்குகளும் நடைபெற்று வரும் காலமும் சூழலும் நிலவி வருவதை தற்போது பார்க்கிறோம்.

தீபா மேத்தா இயக்கிய பெயர் Fire  படத்தில் ஷப்னா ஆஸ்மியும், நந்திதா தாஸும் தன் பாலின ஈர்ப்பால் உந்தப்பட்டு உறவு கொள்ளும் காட்சியொன்று மிக அழகாகவும் ஆழமாகவும் அழகியல் ரீதியாகவும் சிறப்பாக படம் ஆக்கப்பட்டு இருக்கும்.

‘வாழ்வு தொடங்கும் இடம் நீதானோ’ என்று அழகான கவிதையைப் போல் தலைப்பு வைத்துவிட்டு தன்பாலின சேர்க்கையாளர்களை பற்றி போதிய புரிதல் இல்லாமல் அரைவேக்கட்டுத்தனமாக படம் எடுத்து வைத்திருக்கிறார்களோ என்ற இயக்குனர் ஜெயராஜ் பழனியை பற்றியும் படக்குழுவினரைப் பற்றியும் எண்ணத் தோன்றுகிறது.
தன் பாலின ஈர்ப்பாளர்கள் வேடத்தில் வரும் ஸ்ருதி பெரியசாமி மற்றும் நிரஞ்சனா நெய்தியார் இருவருமே தத்தம் பாத்திரத்தை உணர்ந்து  மிகச் சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள்.

தன் பாலின ஈர்ப்பு என்பது அறிமுகம் ஆகி, பேசிப் பழகி, நெருக்கமாகும் சமயத்தில் இயல்பாக ஏற்படக்கூடிய ஒரு விஷயம். நிரஞ்சனாவுக்கும் ஸ்ருதிதிக்கும் அறிமுகக் காட்சியிலேயே ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பு வருவது போல் காட்டி இருப்பதெல்லாம் கொஞ்சம் அபத்தமாகவே படுகிறது. தன்பாலின ஈர்ப்பு என்பது ஒருவருக்கு, மற்றொருவர் மீது ஒரு பனிப்படலம் போர்த்துவது போலல்லவா வரவேண்டும்?

இப்படத்தை தயாரிக்க துணிச்சலுடன் முன் வந்தற்காகவே நடிகை நீலிமா இசையைப் பாராட்டலாம். ஆயினும் வித்தியாசமான கதைக் களத்தை கொண்டிருந்தும், தரமான படைப்பாக வழங்கத் தவறிவிட்டார்களே?

பாணி பூரி என்ற தலைப்பில் வித்தியாசமான படம் ஒன்றை தரமானதாக் கொடுத்த ஷார்ட் பிலிக்ஸ் ஓடிடி தளம் இந்த படத்தை செப்டம்ப் 28 முதல் ஸ்டீம் செய்கிறது…