Friday, October 23

Tag: actor prajan

ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு!

ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு!

News
BTK பிலிம்ஸ் பேனரில் B.T. அரசகுமார் தயாரிப்பில் அருள் அஜித் இயக்கும் 'கயிலன்' திரைப்படத்தின் முன்னோட்ட திரையுலக முன்னணியினர் பங்கேற்பு! BTK பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் B.T. அரசகுமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அருள் அஜித் இயக்கத்தில் நடிகைகள் ஷிவதா மற்றும் ரம்பா பாண்டியன் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் 'கயிலன்' திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. ஜூலை 25ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'கயிலன் ' திரைப்படத்தில் ஷிவதா, ரம்யா பாண்டியன், பிரஜின், மனோபாலா, ஞானசம்பந்தம், அபிஷேக் ஜோசப், அனுபமா குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அமீன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கார்த்திக் ஹர்ஷா, ஹரி எஸ்.ஆர். இசையமைத்திருக்கிறார்கள். விறுவிறுப்பான திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டத்தை வெளியிடும் விழாவில் பட...
‘சேவகர்’ படம் நடிகர் விஜய்க்காக உருவாக்கப்பட்ட கதை!

‘சேவகர்’ படம் நடிகர் விஜய்க்காக உருவாக்கப்பட்ட கதை!

News
'சேவகர்' படம் நடிகர் விஜய்க்காக உருவாக்கப்பட்ட கதை : விநியோகஸ்தர் ஜெனிஷ் பேச்சு ! திரைப்படத்திற்கு கதாநாயகனையும் இயக்குநரையும் தயாரிப்பாளரையும் விட முக்கியமான ஒன்று தேவையாக உள்ளது என்று இயக்குநர் கே .பாக்யராஜ் ஒரு திரைப்பட விழாவில் கூறினார். இது பற்றிய விவரம் வருமாறு: சில்வர் மூவிஸ் இன்டர்நேஷனல் சார்பில் ராஜன் ஜோசப் தாமஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் 'சேவகர்'.இப்படத்தை சந்தோஷ் கோபிநாத் இயக்கியுள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் மட்டும் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று சென்னையில் பத்திரிகையாளர்கள் ஊடகத்தினர் முன்னிலையில் படக்குழுவினர் கலந்து கொள்ள நடைபெற்றது. இப்படத்தை திரையரங்குகளில் ஆக்சன் ரியாக்ஷன் விநியோக நிறுவனத்தின் சார்பில் வெளியிடும் விநியோகஸ்தர் ஜெனிஷ் விழாவுக்கு வந்திருந்தவர்களை வரவேற்றுப் பேசினார். அவர் பேசும்போது, " இந்தப் படத்தின் அறிமுக விழாவைப் பெரிதாக நடத்த வேண்டு...
நண்பனுக்காகத் தயாரிக்கப்பட்டுள்ள படம் ‘சேவகர்’!

நண்பனுக்காகத் தயாரிக்கப்பட்டுள்ள படம் ‘சேவகர்’!

News
நண்பனுக்காகத் தயாரிக்கப்பட்டுள்ள படம் 'சேவகர்'! முழுக்க முழுக்க ஒரு மலையாளத் திரைப்படக் குழுவினர் தமிழின் மீது நம்பிக்கை வைத்து உருவாக்கி உள்ள திரைப்படம் தான் 'சேவகர்' இது ஓர் அரசியல் த்ரில்லராக உருவாகியுள்ளது. 'சேவகர்'படத்தில் பிரஜின், ஷகானா , போஸ் வெங்கட், ஆடுகளம் நரேன்,மதுரை சரவணன், உடுமலை ராஜேஷ், ஹீமா சங்கரி, ரூபா, சுனில், பாலு, ஷாஜி கிருஷ்ணா, சாய் சங்கர், ஜிஷ்னு ஜித் ,மனோ,ஜமீன்குமார்,ஷர்புதீன்,சந்துரு,ராஜ்குமார் நடித்துள்ளனர். இப்படத்தை சந்தோஷ் கோபிநாத் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். இசை ஆர் டி மோகன். ஒளிப்பதிவு பிரதீப் நாயர், படத்தொகுப்பு ரஞ்சித், கலை இயக்கம் ஸ்ரீகுமார் ,நடனம் ரேவதி ராவ், பாடல்கள் ராஜேஷ் முருகன், வேலன் ராஜ், அன்பழகன் .,சவுண்ட் இன்ஜினியர் கதிர்.தயாரிப்பு மேற்பார்வை சதீஷ் பாலக்காடு. சில்வர் மூவிஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ராஜன் ஜோசப் தாமஸ்,தயாரித்துள்ளார்...
பிரஜின் கதாநாயகனாக நடிக்கும் ‘ஃ’ திரைப்படம்!

பிரஜின் கதாநாயகனாக நடிக்கும் ‘ஃ’ திரைப்படம்!

News
படப்பிடிப்பில் மிகப்பெரிய தீ விபத்தில் இருந்து மயிரிழையில் உயிர்தப்பிய 'ஃ' பட ஹீரோவும் இயக்குநரும் அம்பிகாபதி மூவி மேக்கர்ஸ் சார்பில் பொன் செல்வராஜ் தயாரிப்பில் மற்றும் C.நளினகுமாரி இணை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'ஃ'. இயக்குநர் ஸ்டாலின் V இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். பிரஜின் கதாநாயகனாக நடிக்க. கதாநாயகியாக டூரிங் டாக்கீஸ் புகழ் காயத்ரி ரமா நடித்துள்ளார். இன்னொரு கதாநாயகனாக முக்கிய வேடத்தில் பருத்திவீரன் வெங்கடேஷ் நடிக்க, வில்லனாக இயக்குநர் ஸ்டாலின் நடித்துள்ளார். மேலும் ஏழாம் அறிவு ராமநாதன், KPY சரத், KPY வினோத், வடக்கு வாசல் ரமேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தாயம் படத்திற்கு இசையமைத்த சதீஷ் செல்வம் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஜூங்கா, மாமனிதன் ஆகிய படங்களில் இணை ஒளிப்பதிவாளராக பணியாற்றிய தேவசூர்யா இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்...
மலையாளத்தில் வில்லனாக  நடிக்கும் பிரஜின்!

மலையாளத்தில் வில்லனாக நடிக்கும் பிரஜின்!

News
சின்னத்திரை வெள்ளித்திரை என்று இரண்டிலுமே சரிசமமாக கவனம் செலுத்தி வருபவர் நடிகர் பிரஜின். சமீபத்தில் ஓணம் பண்டிகை ரிலீசாக மலையாளத்தில் வெளியாகியுள்ள லவ் ஆக்ஷன் ட்ராமா என்கிற படத்தில் வில்லனாக நடித்து சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார் பிரஜின். நிவின்பாலி, நயன்தாரா, வினித் சீனிவாசன், அஜு வர்கீஸ் என முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படம் ஓணம் பண்டிகை ரிலீசாக வெளியான படங்களிலேயே நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது. திடீரென மலையாள படத்தில் வில்லனாக மாறியது எப்படி, இந்தப்படத்தில் நடித்த அனுபவங்கள் என்ன என்பது குறித்தெல்லாம் நம்மிடம் பகிர்ந்து கொண்டார் பிரஜின். மலையாளத்தில் ஏற்கனவே சமீபத்தில் வெளியான ‘த்ரில்லர்’ படம் உட்பட 4 படங்களில் நடித்துள்ளேன்,, சண்டக்கோழி வில்லன் நடிகர் லால் டைரக்ஷனில் மலையாளத்தில் ‘டோர்னமெண்ட்’ என்கிற படத்தில் வில்லனாக நடித்தபோது அந்த படத்தை பார்த்த நகைச்சுவை நடிகர் அஜு வர்கீ...