ஆந்திர அரசின் அமைச்சராக பதவியேற்றுள்ள திருமதி ரோஜாவுக்கு பாராட்டு விழா!
ஆந்திர அரசின் அமைச்சராக பதவியேற்றுள்ள திருமதி ரோஜா செல்வமணி அவர்களுக்கு தென்னிந்திய திரைத்துறை சார்பில் பாராட்டு விழா!
ஆந்திர அரசின் கலாச்சார, சுற்றுலாத்துறை அமைச்சராக நடிகை திருமதி ரோஜா செல்வமணி அவர்கள் பொறுப்பேற்றுள்ளார். இதனை பாராட்டும் விதமாக, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர்கள் சங்கம், இசையமைப்பாளர்கள் சங்கம் ஆகியவற்றின் ஆதரவோடு தென்னிந்திய திரைத்துறையினர் இணைந்து இயக்குநர் இமயம் பாரதிராஜா தலைமையில் மே 7 ஆம் தேதி திருமதி ரோஜாவுக்கு பாராட்டு விழா நடத்தவுள்ளனர்.
இதனை அறிவிக்கும் விதமாக தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
இந்நிகழ்வினில்,தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பேசியதாவது…
நமது திரைத்துறையை சார்ந்த திருமதி ரோஜா அவர்கள் ஆந்திராவில் கலாச்சார சுற்றுலாத்துறை அமைச்சராகி இருப்பது நமது திரைத்துறை...